உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(256)

அப்பாத்துரையம் - 30

1799-இல் அடிலி அன்பழைப்புக் கிணங்க இருவரும் பாரிஸ் வந்தனர். மூரட்டுக்குப் புதிய பட்டம் வழங்கப்பட்டது. அவன் மூரட் கோமான் ஆனான். லாரைன் மீண்டும் புது உரிமையால் கோமாட்டியாயினாள். முன் அவர்களை அவள் பட்டம் பிரித்து நின்றது. இன்று அவர்கள் சேர்க்கைக்குப் புதுச் சின்னமும் புதுப் புகழும் பொலிவும் அளித்தது.

அடிலியும் நெப்போலியன் மனைவி ஜோஸஃவினும்புரட்சித் தொடக்கத்தில் ஒன்றாகவே சிறைப்பட்டுச் சிறையிலே தோழமை பெற்றவர்கள். இப்போது ஜோஸஃவின் கட்டிளமைப் பருவம் கடந்தவளானாலும் அது தோற்றாமல் தன் இயற்கையழகைப் பலவகையிலும் பெருக்கி, நெப்போலியன் குறிப்பறிந்து அவனை மகிழ்விப்பதில் ஈடுபட்டிருந்தாள்.நெப்போலியனிடம் அவளுக்குப் பேரளவு செல்வாக்கும் இருந்தது. தன் இளமைத் தோழிக்காக அவள் இச்செல்வாக்கைப் பயன்படுத்தத் தயங்கவில்லை.

அடிலி ஜோஸஃவினைக் காணச் சென்றபொழுது நெப்போலியன் துயிலில் ஆழ்ந்திருந்தான். ஜோஸஃவினே அவளை வரவேற்றான்.வெளிக்கூடத்திலிருந்த ஜோஸஃவினின் நாய் ஃவார்ச்சூன் பார்க்கப் பயங்கரமானது. ஆனால், அவள் அதனிடம் மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவள் மண விழாவில்கூட அதை அவள் விட்டுப் பிரியவில்லை. அதுவும் மணமகனாகிய நெப்போலி யனையே கடித்துத் தன் சலுகையின் அளவைக் காட்டிற்று. இப்போதும் அது உறுமிக் கொண்டு அடிலிமீது பாய முயன்றது. ஜோஸஃவின் அதனை விலக்கி விட்டுத் தோழியுடனிருந்து பேசிய போதும் அது விடாமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது.

66

'ஆ, மாது தே அஸ்டின் என்னை வந்து காண விரும்பியது கண்டு மிக மகிழ்ச்சியடைகிறேன். (நாயை நோக்கி) பேசாதிரு சிறிது நேரம், ஃவார்ச்சூன். இது என் பழைய தோழி அடிலி. (மீண்டும் அடிலியை நோக்கி) உங்கள் தாய் மாது சிராம்மோன் எப்படி இருக்கிறாள்? வா, வந்து என்னுடன் அமர்ந்து எல்லாம் தெரிவி. நாம் தேநீர் அருந்திக்கொண்டே பேசலாம். நான் தேநீர் கொண்டுவரச் சொல்லுகிறேன்” என்று அன்பாதரவுடன் கூறி அவள் வேலையாட்களைத் தேநீர் கொண்டுவரும்படி பணித்தாள்.