39. நந்தா விளக்கு
ளமை அழகை விலைப்படுத்தும்; முதுமை அதனை நுகரும் என்ற உண்மைக்கு மூரட்லாரைனின் வாழ்க்கை முறையும் அவர்கள் இல்லமும் இப்போது இலக்காயிருந்தன. வீட்டின் பலகணிகள் பூந்தோட்டத்தை எட்டிப் பார்க்கும்படி அமைந்திருந்தன. அத்தோட்டத்தின் மலர்கள் ஒரு கவிஞனின் கவிதைக் கனவையும், அக்கவிஞன் கனவுகண்ட நங்கையின் கலைக் கனவையும் ஒருங்கே நினைவூட்டுவனவாய் இருந்தன. வெள்ளைச் சிரிப்பு சிரிக்கும் முல்லைப் பந்தருடன் போட்டியிட்டு வெள்ளை, சிவப்பு, நீல நிறங்களைக் கலந்து காட்டிய அந்திமந்தாரங்கள், சிவந்த செம்பருந்திகள், அம்பருத்திகள், நந்தியாவட்டைகள் ஆகியவை கூட்டு நடனமாடின.பன்னிறங்கள் மூரட்டின் நிலையற்ற துடிப்பைக் காட்டின. ஆனால், அதனிடையே அவன் தன் காதல் மனைவி லாரைனுக்குப் பிடித்தமான தூய முல்லைக்கு நடுவிடந்தர மறந்து விடவில்லை. நடமாடமுடியாத அவள் உடனிருந்து பேணினாற் போல அவன் கை அவளுக்கு விருப்பமான மலரையும் வளர்த்தது.'
லாரைன் எப்போதுமே நல்ல வீட்டமைப்பை விரும்பியவள். அதனை மதித்துணரும் பண்பும் உடையவள். ஆனால், அதனை ஒருங்கமைக்கும் பயிற்சி அவளிடம் முன்பே இல்லாதிருந்தது. உடல் சோர்வுற்ற இப்போது அதன் பொறுப்பும் மூரட்டிடமே இருந்தது. அவ்வப்போது அடிலி இப்போது அவளுக்கு இதில் உதவியாயிருந்தாள். இவ்விருவர் முயற்சியால் லாரைனுக்கு வீட்டின் அமைதிகாக்க ஒரு தலைவியின் மேற்பார்வையில்லாக் குறை தோற்றாமலே இருந்தது. தன்னுடன் தன் இரு குழந்தை களையும் தீட்டியிருந்த லாரைனின் ஓவியம் வீட்டு முன் கூட முகப்பை அழகு செய்தது.தோட்ட மலர்களில் பொறுக்கி எடுத்த சில கொத்துகள் பலகணியடுத்த சுவரொட்டிப் பலகையில்