262
II-
அப்பாத்துரையம் - 30
அழகுற வைக்கப்ட்டிருந்தன. எதிரே இருந்த கண்ணாடிகள் அப்பூந்தட்டுகளையும் தோட்டத்தின் மலர்களையும் அருகருகாக நிழற்படுத்திக் காட்டின. மற்றொரு புறத்துச் சுவரின் மங்குப் பிடி மீதமைந்த இரண்டு மெழுகுவத்தி விளக்குகள் இருந்தன. அவற்றின் நடுவே வேள்மதனின் அழகிய சிற்றுருவம் நகைத்து நின்றது.
அரசவையினின்று, புதிய பட்டம் பதவிகளின் சின்னங்கள் பெருமையுடன் அங்கிமீது காட்சியளிக்க மூரட் இல்லத்தில் நுழைவான். ஆடைமாற்றி அவன் சிற்றுண்டியுடனும் பருகு நீருடனும் பகலெல்லாம் படுக்கையிலிந்து தன்னைப் பற்றியே கனவு கொண்டிருக்கும் தன் காதல் மனைவியண்டை யமர்ந்து இன்னுரையாடி ஊட்டி உண்பான். அவள் தன் கனவுகளை இன்றும் இனிய கட்டுரையாக, வருணனையாக, ஒவியங்களாகத் தீட்டுவதுண்டு. மூரட்டும் அவளும் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்துப் பாராட்டியும் குற்றம் சாட்டியும் மகிழ்வர். விடுமுறை நாட்களில் இருவரும் இலத்தீன் காவியம் படிப்பர். அல்லது அதன் மொழி பெயர்ப்பில் பங்கு கொள்வர். அடிக்கடி ஒரு சொல்லுக்கு இருவரும் மல்லாடுவர். சொற்போரில் இன்னும் எவரும் உண்மை வெற்றியடைவதில்லை. யாராவது ஒருவரின் முதல் முத்தம் சொற்போருக்கு ஒரு முடிவு கட்டும். முதுமை இக்காதல் நாடகத்தை சிறிதும் குறைத்துவிடவேயில்லை. இளமையின் பலவகைத் தடைகளை நோக்க, முதுமையே அக்காதலர்களின் உண்மை நண்பன் எனத் தோற்றிற்று.
1804இல் நெப்போலியன் பேரரசனாக முடிசூட்டினான். மூரட் செல்வத்தில் செல்வர் நிலையில் இல்லாத போதிலும் அதில் பங்கு கொள்ளும் கலைமதிப்புடையவனாயிருந்தான்.
இருவரும் அடிக்கடி நெப்போலியன் நாட்டுப்புறப் பண்ணை செல்லும்போது உடன் சென்று விருந்தினராயிருந்தனர். லாரைன் இப்போதும் பேச்சினால் குடிசையையும் அரண்மனை யாக்கும்திறமுடையவளாகவே இருந்தாள். பழைய அரசி பற்றியும், நாகரிக நடையுடை மாறுபாடுகள் பற்றியும் அவள் பேசிக் கேட்பதில் எவருக்கும் சோர்வு ஏற்பட்டதில்லை. பேரரசன் நெப்போலியனுக்கு அதுவே பெரு விருந்தாயிருந்தது. ரண்டாண்டுகளுக்கு முன்பே நாடு கடத்தப் பட்டோர் அனைவரும் திருப்பி அழைக்கப்பட்டிருந்தனர். லாரைன், மூரட்