வாடா மல்லி
263
ஆகியவர்களின் பழைய நண்பர்கள் பலர் இப்போது வந்து அவர்களுடன் அடிக்கடி கலந்து கொண்டனர். ஆனால், பழைய நண்பர்கள் எவருமே லாரைனையும் மூரட்டையும் கண்டு பொறாமைப்படாமலிருக்க முடியவில்லை. அவர்கள் வாழ்வும் செல்வமும் ஒருங்கே இழந்திருந்தனர். லாரைனும், மூரட்டும் வாழ்வுடன் செல்வமும் இவ்விரண்டுக்கும் மேம்பட்ட இன்ப நிறைவும் பெற்றிருந்தனர்.
புயலில் அணையாத தீ இப்போது அமைதியில் நந்தா விளக்கா யிருந்தது. சூறாவளியில் வளைந்து நெளிந்த நீண்ட மலர்க் காம்பு இப்போது தலைநிமிர்ந்து நின்று தன் மலரை உயர்த்திக் காட்டி, தான் வாடாமலர், 'வாடாமல்லி' என்பதை விளம்பரப்படுத்திற்று.
லாரைன் அடிக்கடி தன் இறந்து போன பழைய நண்பர்களையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் நினைத்து வருந்துவாள். பாரிஸின் பல காட்சிகள் இவற்றை நினைவூட்டி அவள் மனப்புண்களைக் கிளறின. மூரட் அவள் கவனத்தைத் தன் காதலுலகு மீது திருப்புவான். “புரட்சியை எண்ணி வருந்துவது தவறு லாரைன், உண்மையில் அது ஏழை மக்கள் வாழ்வைப் பாதிக்கவே யில்லை. நம் காதல் வாழ்வில் அது செய்ததெல்லாம் முன்னைய வாழ்வில் இருந்த ஓயாத் தடைகளை அகற்றியதே. அது அழித்தது பெரும்பாலும் பகட்டு வாழ்வையும் நம் காதலுக்குத் தடையாயிருந்த நம் தற் பெருமைகளையும் மட்டுந்தான்” என்று அவன் விளக்குவான். அது முற்றிலும் உண்மையன்றாயினும் பெரும் பகுதி உண்மை என்பதை அவள் கண்டாள். தன் தாயின் இறுதிப் படுக்கை பற்றிய அவள் தொலை நினைவுகள் வந்து, அப்புரட்சிக்கு ஆசி கூறுபவை போலத் தோன்றின. அவள் காதல் வாழ்வில் எத்தனை கடுமைகள் இருந்தாலும் அந்தத் தாயின் சோகவாழ்வை நோக்க அது அவளுக்கு வானுலகமாகத் தென்பட்டது.
ஆக்டேவ் மூரட்டுக்கு இப்போது தன் வாழ்வில் ஒரே குறை மட்டும்தான் இருப்பதாகப் புலப்பட்டது.லாரைனின் வாழ்வு தன் ன்பக் கனவுகளுக்கு முழுதும் இலக்கானதாயிருந்ததுடன் தன் திரிகளாலும் நண்பர்களாலும் நண்பர்களாலும் எவாரலும் எவாரலும் குறைகூற முடியாதபடி அப்பழுக்கற்றதாயிருந்தது. அந்நிறை பண்பை