உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(264)

அப்பாத்துரையம் - 30

|| வாழ்விறுதியிலாவது முயன்று பெற வேண்டும் என்று அவன் சில சமயம் விரும்பினான்; ஆனால், அதைக் கேட்ட லாரைன் நோயையும் மறந்து விலாப் புடைக்கச் சிரித்தாள். “புரட்சிக் காரருக்கு இயைய நடக்க முயன்று பார்த்தீர்கள். உங்கள் குறிக்கோளும் அவர்கள் குறிக்கோளும் ஒன்றாகத் தோற்றிற்று. ஆயினும், அவர்கள் உங்கள் பண்பில் நிற்கவில்லை. அப்படி யிருக்க நாங்கள் பார்த்துக் கேலி செய்து கவிதையில் தாக்கி வந்த சமயத் துறைவரையும் உயர்குடிப் பசப்பரையும் எப்படி மன நிறைவு படுத்த முடியும்?” என்று அவள் கேட்டாள்.

அவள் கூறிய விடை அவனைப் பின்னும் சிரிக்க வைத்தது. "நீ இவ்வளவு பேரையும் என்னையும் மனநிறைவுபடுத்த வில்லையா? மேலும் பெண்களைப் பற்றியும் காதலைப் பற்றியும் நான் கொண்டிருந்த ஏளனக் கருத்துகளைக் காதல் கண்ட பின் நான் தடமின்றி விட்டுவிட வில்லையா?” என்று கேட்டான்.

66

'அன்பரே, என் காதலை நீங்கள் உறுதியாகப் பற்றி நின்றதும் பெண்களைப் பற்றியும் காதலைப்பற்றியும் உள்ள தங்கள் கருத்தை என் வகையில் காட்டாததும் உண்மையே. ஆனால், பெண்மையையும் காதலையும் பற்றிய தங்கள் பண்பு மாறிவிட்டதாக எண்ண வேண்டாம். வழிவிடுதியில் நான் கண்ட பெண்.."

66

அவள் பேசமுடியாதபடி அவன் கை அவள் இதழைப் பொத்திற்று. அவன் முகத்தில் நாணத்தின் நிழலாடியதை அவள் கண்டாள். 'அன்பே, உங்களைக் குறைகூற இதைச் சொல்லவில்லை. உண்மையில் இந்தக் குறையே என்னை உங்களிடம் அடிமைப் படுத்தியுள்ளது. நான் எல்லாவகையிலும் உங்களுடன் சரிக்குச் சரி என்று போராடவில்லை என்பதை நீங்கள் பெண்மையைத் தாய்மையைத் தற்கொலைப் படுத்திக் கொண்டேன். ஆனால், அதற்காக நான் வருந்தவில்லை, தங்களைத் திருத்தவும் எண்ணவில்லை. ஏனெனில், தங்களிடம் உள்ள இக்குறையே தங்கள் மதிப்பை உயர்த்துகிறது. காதலுக்கு நீங்கள் கட்டுப்பட்டீர்கள்; பெண்மைக்குக் கட்டுப்படவில்லை. பெண்மைக்கு நீங்கள் கட்டுப்பட்டிருந்தால், உங்கள் மனம் தளர்ந்து இன்று என்னைப் பாதுகாக்கும் நிலையைத் தராதிருக்கும்” என்றாள்.