வாடா மல்லி
267
காத்திருப்பாள். நீங்கள் மணநாளில் போல ன்றும் மன மகிழ்ச்சியுடன் இருக்கலாம்” என்றாள்.
தான் மண அணி அணிந்து, மண அணி அவனுக்கும் அணிவித்து, லாரைன் தன் மடிமீதே அவனைக் கிடத்தினாள். அந்நிலையிலேயே அவன் உயிர் புன்முறுவலுடன் பிரிந்தது.
அகஸ்டியும் புரட்சிக்கெதிரான குற்றவாளி ஒருத்தியின் காதலில் ஈடுபட்டிருந்தான். ஆனால், தந்தையின் தீரம் அவனுக்கு ஒரு வழிகாட்டியாயிருந்தது. அவன் தந்தையிடத்தில் இருந்து, தாய்க்கு ஆதரவானான்.
மூட்டின் உள்ள வளம் லாரைனுக்கு இப்போது அவள் மரபுரிமைபோல வந்தமைந்தது. அவள் அறிவு முற்றிலும் தெளிவடைந்தது. அவனிருந்தபோது அவனிடம் பேசும் இன்பத்தினும், இப்போது அவன் பேச்சை, அவன் முகத்தை நினைக்கும் இன்பம் சிறிதாயில்லை. அவன் காதற் கடிதங்களோ அவள் உள்ளத்தில் பாராமல் படிந்திருந்தன. விவிலிய நூலைத் தவறாமல் படித்துவந்த அவள் அவற்றுக்கு ஒப்பாக அவற்றை உள்ளத்தில் வைத்துப் பேணினாள். கடவுட் பற்றினும் காதல் குறைந்ததன்று என்பதை அவன் துன்ப வாழ்வின் இன்ப நிறைவு பட்டாங்கமாகக் காட்டிற்று. அவள் கடவுட் பற்றையும் மனித இனப்பற்றையும் மூரட் காதலும் அவள் மாறா இளமை உள்ளமும் தூய்மைப்படுத்தி உயர்வு தருபவையாயிருந்தன.
மூரட் இறந்தது 1815இல் அவனுக்காக அவள் வரைந்த கல்லறை வாசகம்.
“என் நண்பரே, நான் இப்போது உறங்குகிறேன்” என்பது தான். இறந்த அவன் நினைவு உண்மையில் அவளுக்குத் தூங்கும் காதலனைக் காணும் நிலையாகவே இருந்தது. அவள் காதில் உடல் கடந்த, புலனுணர்ச்சி கடந்த நிலையை எய்திவிட்டது.
இளமை வாழ்விலே யாரினும் தூய உள்ளமும் எவரினும் உயர்ந்த நாகரிக நயமும் படைத்த அக்கலை நங்கையின் அறிவும் முதுமையில் முதிர்ந்த நெல்லிக்கனி போல் பளிங்குத் தன்மை பெற்று ஒளி வீசிற்று. அவள் மூரட்டின் துணையில்லாமல் வாழ்ந்த பன்னிரண்டாண்டுகளும் மூரட் ஏழை மக்களிடையே ஆற்றிய நற்றொண்டினை ஏழை, செல்வர், பொதுமக்கள்,