வாடா மல்லி
55
இருந்தாள். அவள் அறிவும் அன்பும் அவளை அவ் அழகரசிகள் என்றும் நாட முடியாத உயர் மதிப்புப் பெறச் செய்திருந்தன. ஆகவே, இன்பக் கோட்டையிலே அவள் ஓர் அறிவுக் கொடியாக உலவினாள்; வஞ்சனைப் புயலிடையே நேர்மைத் தென்றலாக அவள் விளங்கினாள். ஆயினும், அவள் வகையில் தெய்வம் தன் கொடுமைகளை இன்னும் நிறுத்திவிட்டதாகத் தோன்றவில்லை. ஏனெனில், அவள் முடிசூட்டு விழாவிலிருந்த போதே அவள் கணவன் உயிர் உடலுடன் போராடத் தொடங்கிற்று. பணியாட்கள் விரைந்து அவளை நாடி அனுப்பப் பெற்றனர். விழாவின் நடுவேளையிலேயே அவள் மூடு வண்டியில் கூட்டங்களை ஊடுருவி விரைந்து வந்தாள். ஆனால், விழாவை விட்டு வந்ததுதான் மிச்சம். இங்கே கணவன் உயிர் அகன்றது; அங்கே அவளில்லாமல் விழா நிறைவேறிற்று.
உலகம் அவளைக் கண்டு பொறாமைப்பட்டது. அவள் உலகை எண்ணிப் பொறாமைப்பட்டாள்.
பணம் படைத்த கணவனை, முதுமையுடைய கணவனை மணக்கும் அழகிய மங்கையர் கணவன் நீண்ட நாள் வாழ்வை எதிர்பார்த்தும் மணப்பதில்லை; அவன் மாள்வு அவர்களுக்கு அதிர்ச்சியையூட்டுவதும் கிடையாது. உண்மையில் பலர் கைம் பெண்ணாகும். நாளையே எதிர் பார்த்திருப்பார்கள். அழகிய செவ்வல்லி மலரை விரும்புபவர்கள் அதனுடன் முள்ளையும் சேர்த்துப் பெற வேண்டியிருப்பது போலவே. அவர்கள் தாம் விரும்பும் பணத்துடன் இணைத்துத் தரப் பணம் படைத்த கிழக் கணவனை இழந்து கைம்பெண்ணாவது இத்தகையவர். பெரும்பாலாருக்கும் முள்ளில்லாத செவ்வல்லிப் பூக்கிடைத்தது போன்றது. ஆனால், மாது சிராம்மோன் இத்தரத்து மாதல்ல; அவள் நிலை வேறாகவே இருந்தது. அவள் சிராம் மோனுக்காக உண்மையிலேயே ஏங்கினாள். ஒரு தந்தைக்காக மகன் அடையும் துயர், ஓர் உடன்பிறந்தானுக்காக உடன் பிறந்தான் உடையும் துயர், ஒரு தோழனுக்காக மறுதோழன் அடையும் துயர் இதனினும் மிகுதியாக இருக்க முடியாது; குறைந்தே இருக்கும். தந்தை, தாய், உடன் பிறந்தார், நண்பர் என்ற எல்லா வகை அன்பையும் கணவனிடம் வைத்திருந்த மாதுசிராம்மோன் அவ்வெல்லா வகைத் துன்பங்களையும் ஒரு சேர இப்போது