உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

61

நாடியது இயல்பே. இது அவளது பெருந்தன்மைக் குணம். கணவனில்லாத காரணத்ததால் அவள் பாரிஸை வெறுப்பதும் இயல்பே. ஆனால், பாரிஸ் அவள் உயிர். அங்கே தான் அவள் வாழ முடியும் என்று அவர் கருதினார்.

மன்னனவை, பாரிஸ் நகர வாழ்வு, அவற்றின் செய்திகள் ஆகியவற்றில் அவர் அவள் கவனத்தைத் திருப்பினார். பாரிஸில் அமையாது நாட்டுப்புறம் நாடிய அவள் உள்ளம் இப்போது தன்னையுமறியாமல் பாரிஸ் நகருக்கு ஏங்கத் தொடங்கிற்று.

அவள் பாரிஸ் நண்பர்கள் நான் தவறாமல் அவளுக்குக் கடிதம் எழுதி வந்தனர். அவள் கடித எழுத்தாண்மைக்கு ஓய்வின்றி அவளும் கடிதங்கள் வரைந்து அனுப்பி வந்தாள். ஒருநாள் வழக்கத்திற்கு மேற்பட்ட அளவுடையதாய், மிகச் சீரிய கலை நயமுடைய தாளில் மலர் மணமும் தூள் மணமும் போட்டியிடும் படி மணமூட்டப்பட்ட ஒரு முடங்கல் வந்தது. திரு. ஜோஸப் அதனை ஆவலுடன் அவள் முன் பிரித்துக் காட்டி வாசித்தார். அது இளவரசர் டி. கான்டியின் மாளிகை விருந்துக்கான அழைப்பு.

"இதனை ஏற்று ஒன்றிரண்டு நாள் பாரிஸில் கழித்து விட்டு வந்தாலென்ன?" என்று ஜோஸப் நயமாகக் கேட்டார்.

மாது

சிராம்மோனிடம் இப்போது எத்தகைய ஆர்வத்துக்கும் இடமில்லாது போயிற்று. உணர்ச்சியற்ற, ஆனால் வெறுப்பற்ற குரலில் “சரி, பழைய நண்பர்களை மீண்டும் பார்க்க எனக்கும் எண்ணமுண்டு" என்றாள்.

பாரிஸ் இருகைநீட்டி மாது சிராம்மோனை மீண்டும் வரவேற்றது. அவள் இடைக்கால வாழ்வை அவள் நினைத்திருந் தாலும் பாரிஸ் நினைக்கவில்லை. எம்மாறுதலும் இடையே நிகழாதது போலவே பாரிஸின் இன்பக் கவலை அவளை ஒரு படகுபோல் ஈர்த்துக் கொண்டது. அவளும் நாட்டுப்புறத்தில் நாட்டுப்புற ஆர்வத்துடன் ஆனால், உள்ளுணர்வற்று மிதந்தது போலவே அவ்வின்பக் கேளிக்கைகளுள் கலந்தாள். இன்னும் பாரிஸ் உயர்குடி அவள் தலைமையை முணுமுணுப்பின்றி ஏற்றது.

அவள் பாரிஸ் அழகில் தன்னை இழக்க முடியவில்லை. ஆனால், பாரிஸ் அவள் அழகில் தன்னை இழக்கத் தயங்கவில்லை.