உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

அப்பாத்துரையம் - 30

அவள் எவருடனும் ஆர்வத்துடன் ஊடாடவில்லை. ஆனால், எல்லாரும் போட்டியிட்டுப் பண்பிற் சிறந்த இத்தலை நங்கையின் நட்பில் ஊடாடினர். அவள் உரையாடலில் புத்தார்வ நங்கையரும் புதுமையிளைஞரும் மகிழ்ந்தனர்.

அவ்வாழ்க்கைப்போக்கை மாற்றிய புதுஅனுபவம் இவ்விருந்து மாளிகையிலேயே தொடங்கிற்று. உயர்குடியாளரிடையே உயர்குடியாளராயினும், அவர்களைத் தன் புதுமைப் பாடல்மூலம் தாக்கியும் அதே சமயம் கவர்ச்சி செய்தும் அவர்கள் வாழ்வில் இ டம்பெற்ற கலைஞன் ஆக்டேவ் மூரட் அவ்விருந்தினரில் ஒரு விருந்தினனாக வந்திருந்தான். எழுத்தாண்மைக் கலைநங்கையும் பாடற்கலையன்பனும் இங்கே மோதிக் கொண்டனர்.