வாடா மல்லி
65
அரசன் ஸ்டானிஸ் லாஸ் மிகப் பருத்த உடலுடையவன். வாழ்வின் பிற்பகுதியில் அவன் இன்ப வாழ்வும் சோம்பலும் பெருகின. உடல் பின்னும் அளவில் பெருத்தது. அவன் பெரும்பாலும் அரண்மனையை விட்டு வெளியே செல்வதை நிறுத்திக் கொண்டிருந்தான். இன்றியமையாது செல்ல வேண்டியிருந்தாலும் ஏவலர் அவனை நாற்காலியுடன் தூக்கிக்
கொண்டு போய்த்தான் வண்டியிலேற்றுவர். படுக்கவும் இருக்கவும் அவனுக்கு நாற்காலி வேறு, படுக்கை வேறு என்ற வேற்றுமை கிடையாது. படுக்கையே, விரித்தால் கட்டில், மடக்கினால் நாற்காலி என்ற முறையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலும் அவனிடம் மாறாதிருந்த பழம்பண்பு அவன் போச்சுத் திறமும் நயமும், அவன் மூளைத் திறமும் மட்டுமே இவற்றின் பயனாக ஃபிரஞ்சுப் பேரரசனுக்கு அடுத்தபடியான மதிப்பு அவனுக்கும் அவன் அரசவைக்கும் ஐரோப்பாவெங்கும் இருந்து வந்தது.
கலையழகியாகவும் காதற்கலை மகளாகவும் இருந்த கோமாட்டிடி பஃவ்வர்ஸின் உடல், உளம் இரண்டுமே ஆண்டின் போக்கால் மாறுபடாமல் இருந்தன. அவள் என்றும் கன்னிக் கலையழகியாகவே கியாகவே இருந்தாள். ளைஞரும் கலைஞரும் எப்போதும் அவளைச் சுற்றி வட்டமிட்ட வண்ணமாகவே இருந்தார்கள். அவள் அழகு மட்டுமின்றி அவள் பேச்சும் எல்லாரையும் கவர்ந்தது. நீண்ட நாள் அவளுடன் பழகியவர் களுக்குத்தான் அவள் வயது ஓரளவுக்காவது தெரியவரும். ஆனால், அத்தகையவர்கூடத் தாம் பருவமாறினும் அவள் பருவ மாறாதிருந்தது கண்டு வியப்படைந்தனர். சிறப்பாக இந்நிலை அரசன் ஸ்டானிஸ் லாஸுக்குத்தான் ஏற்பட்டிருந்தது. அவன் முன்போலவே அவளை நடத்தி வந்தான். முன்போலவே அரண்மனையாட்சி முழுவதும் அவள் கையிலே விடப்பட்டிருந்தது. ஆனால், முன்போல் அவன் அவளுடன் ஓடியாட, இன்ப விளையாட்டுகளில் கலக்க முடியவில்லை. அவளுக்கு உள்ளூர அவனிடம் முன் உள்ள கவர்ச்சி கிடையாது. அவள் கலைக்கும் வாழ்வுக்கும் அவன் இப்போது அவ்வளவு பொருத்தமாயில்லை. ஆயினும், அவன் அரசன்; அவள் அரசவைக் கலையரசி. அத்துடன் அவனிடம் அவள் உள்ளூரக் கொண்டிருந்த நம்புணர்ச்சியும் மதிப்பும் சிறிதும் மாறாதிருந்தன. ஆகவே, அவள்