உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி

67

அதன்பின் மன்றத்தலைவரை நோக்கி, "இந்த வண்டியோட்டி களை நம்பி இங்கே வந்தது தவறு. அவனை ஒரு வேலையாக அரண்மனைக்கு அனுப்பினேன். அவன் இன்று திரும்ப மாட்டான் போலிருக்கிறது. நாம் இன்று இந்நகரில் தங்கி அவதிப்படத்தான் வேண்டுமென்று அஞ்சுகிறேன்” என்றாள்.

மன்-தலை: தாங்கள் அதற்காகக் கவலைப்படவேண்டாம் நான்தான் உங்களுடனிருக்கிறேனே, வண்டிக்காரன் வராவிட்டால் போகிறது.நானே-

கோ-டி:வேண்டாம் வேண்டாம். தாங்கள் என் விருந்தினர். அத்துடன் ஒரு வழக்கு மன்றத் தலைவர்!

மன்-தலை: நான் தங்கள் உயிர் நண்பன். என்னிடம் தாங்கள் எவ்வகை வேறுபாடும் காட்ட வேண்டியதில்லை.

66

"அது தெரியாதா எனக்கு?” என்று அவள் ஆர்வத்துடன் அவர் கையைப் பற்றினாள். அவர் இப்பெரும் பேற்றை நழுவவிடாமல் கையை இறுகப் பற்றினார். அவள் அக் கையைத் தான் பற்றாவிடினும் அவர் பற்றியபின் எடுக்க முடியவில்லை. அவள் சோர்வுற்றவள்போல் தன் கையை அதன் முழுப்பளுவுடன் அவர் கைமீது கிடக்கவிட்டாள்.

வழியில் வண்டி விரைவாகச் செல்லும்போது அவள் "இப்போது என்ன இவ்வளவு அவசரம்? வழியில் காட்சிகள் கவர்ச்சிகரமாயிருக்கின்றன. மெள்ள இயற்கைக் காட்சியைக் கண்டின்புற்றுச் செல்வோம்" என்றாள்.

காதலன் நெஞ்சு களிவுற்று நெகிழ்ந்தது. அவர் குதிரை மீது கடிவாளத்தையிட்டு அதனை ஒரு தூக்க நடைபோட விட்டார். அவள் ஒன்றும் பேசாதது கண்டு மெல்லத் திரும்பிப் பார்த்தார். அவள் கண்கள் அரைத்துயில் கொள்வது போன்றிருந்தன. உடல் மெல்லத் துவண்டு அவர் மீது சாய்ந்தது. அத்தறுவாயில் அவரிடம் காதல் தெய்வமே இறங்கி வந்து வரந் தருவது போலிருந்தது. அவர் அவளை அணைத்து தன்மீது சாத்தினார்.

அவள் சற்றுக் கண் திறந்தாள். "இப்போது எதுவரை வந்திருக்கிறோம்?” என்று கேட்டாள். தாம் மிக மெள்ளச்செல்வதற் காக அவள் எங்கே கண்டிக்கப் போகிறாளோ என்று அஞ்சியவராய் அவர் "விரைவில் வந்துவிடுவோம். சிற்றோடையருகிலுள்ள மரத்திட்டுக்கு வந்துவிட்டோம்” என்றார்.