உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 30.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

அப்பாத்துரையம் - 30

“சிறிது இங்கே தங்கிவிட்டுப் போகலாமல்லவா? குதிரை களும் இளைப்பாறித் தண்ணீர் குடிக்குமே” என்றாள் அவள்.

அமுதம் அருகில் இருந்தும். அதை எடுக்கத் துணி வில்லாதவர் போலத்தான் இருந்தார். அவர் வலிய வந்த அழைப்புப் போன்ற இவ்வுரை அவரை ஊக்கியது. அவர் அச்சம் எல்லாம் தீர்ந்தது. தன்னைப்போல அடங்காக் காதலுடையவள் அழைப்பாகவே இச்செயலை அவர் கருதினார். அவர் உடலில் மின்சாரம்போல ஆர்வம் வந்து பாய்ந்தது. அவர் அவளைச் சருகுபோலத் தாங்கிச் சென்று மரத்தடியில் கிடத்தினார். அவள் சிறிது நீர் வேண்டும் என்றாள். மன்றத்தலைவர் விரைந்து ஓடைப் பக்கம் சென்று தம் கை கொண்டமட்டும் தண்ணீர் கொண்டு வந்தார்.

வந்தபோது அவர் கண்ட காட்சி அவரைத் தூக்கி வாரிப் போட்டது. அவள் அருகே ஒரு பச்சைப் பசுங்குழவி கிடந்தது. அவர் அதுபற்றித் தம் வியப்பை வெளியிடத் தொடங்குமுன், அது தன் கதையைத் தொடங்கி ‘வீல் வீல்' என்ற கத்திற்று.

கோமாட்டி முகத்தில் ஒரு மெல்லிய குறும்புநகையின் சாயல் தென்பட்டது. அவள் மன்றத்தலைவரை அருகில் அழைத்து அவர் கையை உரிமையுடன் பற்றி முத்தமிட்டுத் 'தாங்கள் உண்மையான நண்பர் என்று எனக்குத் தெரியும். இனி என் நட்புரிமையில் முதல் இடம் உங்களுக்குத்தான். ஆனால், தாங்கள் இன்னும் ஒரே ஒரு உதவி செய்ய வேண்டும்” என்றாள்.

66

""

தம்முதல் ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு, வழக்கமான நட்புணர்ச்சி விடாமல் அவர் “என்ன உதவியாயினும் கூறுக என்றார். 'ஏதோ பெரிய உதவியாய்த் தானிருக்க வேண்டும்' என்று அவர் எதிர்பார்த்தார்.

66

அரண்மனை சென்றவுடன் தாங்கள்தான் இந்நற் செய்தியை அரசருக்குப் பக்குவமாய்க் கூறவேண்டும். இது நானும் எதிர்பாராத செய்தி என்பதைத் தாங்கள் அறிவிக்க வேண்டும்."

மன்றத் தலைவர் அவள் முன்கருதலைக் கண்டு வியந்தார். ஸ்டானிஸ் லாஸ் ஒரு பிள்ளையின் தந்தையாகக் கூடிய பருவங் கடந்து வந்தாராதலால் அவர் தவறாக ஐயங்கொள்ளக்கூட