70
II-
அப்பாத்துரையம் - 30
இன்பம் விழைந்தாள் இன்பத்தில் தான்மிதந்தாள்
இன்ப அமைதியீண் டெய்தினாள்-இன்ப
உலகுக்குக் காத்திருக்கத் தாளாம லிம்மை
உலகிலே பெற்றாள் உவந்து.
கோமாட்டி பெற்ற மகவு தாயின் கலைத் திறத்துடன் தந்தையின் நகைத் திறமும் தன் சார்பில் வசைத் திறமும் கூட்டிப் பாடக் கற்றுக் கொண்டான். அவன் கவிதைகள் வால்தேரின் வசைத்திறமும், ரூஸோவின் கலைத்திறமும், பழைய ஃபிரஞ்சுக் கவிதையின் இனிமையும் நயமும் ஒருங்கே உடையதாயிருந்தன. தன் புதுமைப் பிறப்பையும் புதுமை வாழ்வையும் உட்பொதிந்து அவன் தன் கல்லறை வாசகமாக எழுதிய பாடல் இது.
ஈதோ ஒரு கவி வீரன் பெரு வாழ்க்கை ஈதோ குதிபெருங் கானாறு-ஈதோ
வழிநெறியே வாழ்வென்னும் நல்லுரை நாட்ட வழியிடைத் தோன்றினான் வந்து.
ளைய ஸ்டானிஸ் லாஸ் சில நாட்களிலேயே அரண்மனையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, அருகிலிருந்த ஒரு சிற்றூரில் ஒருகுடியானவனிடம்வளர்க்கப்படும்படிவிடப்பட்டான். குடியானவனுக்கு நாய்கள் மீதும் கால்நடைகள் மீதும் மிகவும் விருப்பம்.ஸ்டானிஸ் லாஸையும் நாய்களைப்போலவே அன்பாக நாய்க் கொட்டிலிலிட்டு வளர்த்தான். ஸ்டானிஸ் லாஸ் என்ற அவன் பெயரும் விரைவில் மறக்கப்பட்டது. தாய் தன் குழந்தை என்று கவலைகொள்ளாதபோது, தந்தை எப்படிக் கவலை கொள்ள முடியும்? அவன் முதற்பெயர் வழக்காறற்று, தாயின் பட்டப்பெயருக்கும் அவன் உரியவனாகாமல், ஆக்டேஸ் மூரட் என்ற அவன் குடிப்பெயர் ஒன்றினால் மட்டுமே அவன் குறிக்கப் பெற்றான். தாய் தந்தையரின் உரிமையாக அவனுக்குப் பட்டம், செல்வம், அறிவு ஆகிய எதுவுமில்லை. தந்தையின் திறமும் கவலையற்ற தன்மையும்; தாயின் மூலம் ஃபிரான்சுக் குரிய கலை நயமும் மட்டும் அவனுடைய மரபுச் செல்வங்களாக விளங்கின.