11. விகடக் கவிஞனும் விகடக் குள்ளனும்
ஒருநாள் மன்னர் ஸ்டானிஸ் லாஸ் கோமாட்டி டி-பஃவ் வர்ஸுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். “என் பெயருடைய நம் சிறிய ஸ்டானிஸ் லாஸ் இன்று வருகிறானாம்” என்று அவர் பேச்சைத் தொடங்கினார். ஸ்டானிஸ் லாஸ் டி- பஃவ்வர்ஸுக்கு இப்போது ஒன்பது ஆண்டுப் பருவமாயிற்று.
66
“அவன் அறிவு நிலைபற்றி என்னென்னவோ கேள்விப்படு கிறேன். அவன் அறிவு மந்தமுடையவனாயிருந்தால், அவன் அறிவைத் தீட்ட இங்கே சில விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று எண்ணுகிறேன்” என்றாள் கோமாட்டி.
“அவனுடன் நான் விளையாடமாட்டேன்” என்றாள் சிறுமி காதரீன்! அவள் ஆறு வயதுடையவள். டி-பஃவ்வர்ஸ் பிறந்ததன் பின் அரசிபெற்ற பெண் அவள். அவள் அண்ணன் சார்லஸும் "நானும் விளையாடப் போவதில்லை" என்று சுளித்தான். இருபிள்ளைகளும் டி-பஃவ்வர்ஸை வெறுக்கும்படி அவர்கள் அன்னையால் பயிற்றுவிக்கப்பட்டிருந்தனர்.
சிறுவன் ஸ்டானிஸ் லாஸ் எதிர்பார்த்த வேளைக்கு முன்பே வந்து விட்டான். அரசனும் கோமாட்டியும் அப்போது வெளியே போயிருந்தனர். அரண்மனையில் வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். இவர்களுள் எவரும் டி-பஃவ்வர்ஸை வளர்ந்தபின் பார்த்தவர்களல்லர். சிறுவனுக்கும் யாரையும் தெரியாது. தான் இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவும் சிறுவனாகிய அவன் அறியவில்லை.அப்பருவத்திலுள்ள சிறுவர்களைப்போலவே அவன் தான் என்றும் காணாத, ஆனால் அடிக்கடி கேள்விப்பட்ட தன் அன்னையைக் காண ஆவலுடையவனா யிருந்தான். ஆனால், அச்சிறுவன் கேள்விக்கு ‘அவள் அரண்மனையில் இல்லை' என்ற