வாடா மல்லி
77
உண்பாருக்கு வழங்காமல் ஒதுக்கிவைத்த தின்பண்டங்கள், உணவு வாங்காமல் திருட்டுக் கணக்கில் மீத்துவைத்த பணம் எல்லாம் பணியாட்கள் கைப்பொருளாகின்றன. அங்கே என் கலைக்கு இடமில்லை. பொய்மை, வஞ்சகம் ஆகியவற்றுக்கே முதலிடம் அதைக் காண இங்குள்ள கவலையற்ற சோம்பல் வாழ்வுகூடக் கேடில்லை”
தான் உள்ளத்தில் எண்ணியதைக் கலைஞனும் எண்ணியது கண்டு சிறுவன் வியப்படைந்தான். ஆனால், அவன் அறியாத செய்திகளும் உலகில் பல நிகழ்கின்றன என்று உணரலானான்.
சமையல் துறையில் ஏற்பட்ட இவ்விரு நண்பர்களுமே போலந்து அரண்மனையில் ஆக்டேவ் மூரட்டுக்குக் கிட்டிய இரண்டு நண்பர்கள். வேறு யாவரும் அவனைக் கவனிக்கவில்லை. கோமாட்டியிடம் தொடக்க முதலே சிறுவன் மிகுதி ஈடுபாடு காட்டினான்.ஆனால், அவள் அவனை விரும்பவோ, வெறுக்கவோ செய்யவில்லை. அவனைத் தன் மகனாக நடத்துவதை விட அயலானாக நடத்துவதிலேயே அவள் நாட்டங் கொண்டாள். இது அவனுக்கும் ஓரளவு பிடித்தமாகவே இருந்தது. கண்ட கண்டவரிடமெல்லாம் தொல்லையையே அனுபவித்து வந்த சிறுவனுக்குத் தொல்லை தராத தாய்கூட இனிய பண்புடைய தாயாகவே தோற்றினாள். இத்துடன் தாயின் கலைப் பண்பும் திறமையும் நயமிக்க வசைப் பேச்சுகளும் அவன் கலையார் வத்தைத் தூண்டி யெழுப்பின. மக்கள் உளப் பாங்கறிந்து அவள் உரையாடுவதையும், சூழலுக்கேற்ற வகையில் பிறரை நையாண்டி செய்து சிறுபாக்கள் இயற்றிச் சார்த்துக்கவி பாடுவதையும் அவன் உடனிருந்து கண்டும் கேட்டும் மகிழ்ந்தான். அவ்வப்போது அவன் உள்ளத்திலும் அதே போன்ற உரையாடல்களும் பாடல்களும் நிழலாடத் தொடங்கின. அவன் வாய் திறவாமலே உள்ளந் திறந்து இவற்றில் ஊடாடினான். இத்தகைய கனவார்வங்களைத் தூண்டிய அத்தாயின் வாழ்க்கையில் பிறர் காணக்கூடும் கோணல் மாணல்களும் குறைகளும் அவன் கண்ணில் படாததில் வியப்பில்லை. அவன் பெண்மை பற்றிய எந்த ஒழுக்க மரபைக் கொண்டும் தாயை அளவிட முனையவில்லை. உண்மையில் அவள் வாழ்க்கை மரபைக் கொண்டே அவள் பெண்மையை அளவிட்டான். அவ்வளவு முறையால் அவன் கண்டதெல்லாம்