82
||-
அப்பாத்துரையம் - 30
புதுமைக் கண்ணனாய்ப் பார்க்கெட் அரண்மனை வாழ்வில் உலவினார். ஆக்டேவ் மூரட் தாயிடமிருந்தும் மன்னரிட மிருந்தும் பெற்ற வாழ்க்கைத் தத்துவம் இத்துறவிக் கோலம் பூண்ட கலைப் பேரரசன் ஒண் கலையால் உறுதிப்பட்டது.இன்ப வாழ்வு முற்றிலும் தெவிட்டாமலிருக்க இடையிடையே வழங்க வேண்டிய காரம்தான் சமயம் என்ற எண்ணமே அவனுக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை.
அரண்மனை வாழ்வு, அன்னை, மன்னன், அப்பே பார்க்கெட் ஆகிய இத்தனை சூழல்களிலிருந்தும் ஆக்டேவ் மூரட் பல பாடங்களும் பல திறங்களும் பெற்றான். ஆனால், அவன் உள்ளார்ந்த இளமைத் துடிப்பு எதனாலும் பண்படவில்லை. அத்துடன் பார்க்கெட்டிடமிருந்து அவன் சமய எதிர்ப்பை மட்டுமே கற்றான். அவர் சமயப்புற வேடத்தை அவன் கற்றுக் கொள்ள வில்லை. அரண்மனை வாழ்விலிருந்து அவன் காதல் பசப்பைக் கற்றுக் கொண்டான். ஆனால், அவன் உள்ளம் அது இன்னதென்றறியாமல், அதனை ஒரு விளையாட்டுப் பொழுது போக்காக மட்டுமே கொண்டது. இசை, நாடகம், கூத்துகள் ஆகியவற்றுடன் அதுவும் ஒரு பொழுதுபோக்கு என்றே அவன் எண்ணினான். இத்தனையையும் கடந்து அவன் சூழலில் எவரிடமும் இல்லாத ஒரு சமயப் பண்பு மட்டும் அவனிடம் குடிகொண்டிருந்தது. அவன் உள்ளம் அன்பின் கவர்ச்சி நாடிற்று. மக்கள் யாவரும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் அவனிடம் ஊறித் ததும்பிற்று. அன்னையின் பாடல்களிலும் துறவியின் வசைப்பாக்களிலும் காணமுடியாத ஓர் உயர் ஒளிக் கவர்ச்சியை இது அவன் உரையாடல்களுக்கும் பாடல்களுக்கும் தந்து பொதுமக்களை அவனிடம் பெரிதும் ஈடுபடுத்தின.அவனும் பெரு மக்களிடையே ஒரு கோமாளியாகவும் பொது மக்களிடயே ஒரு சிறு தெய்வமாகவும் ஊடாடினான். கேலி, களியாட்டங் களிடையே அவன் உணவற்றோருக்கு உணவு தேடியளித்தான். இன்னற் பட்டோருக்கு ஆறுதலுரை யளித்துத் தேற்றுவித்தான்.
ங்
ஆக்டேவ் மூரட்டுக்கு 18 ஆண்டானபோது மன்னன் ஸ்டானிஸ் லாஸ் தன் பெயர் கொண்ட இச்சிறுவனுக்கு இரண்டு சிறு பண்ணைகளை அளித்தான். மன்னனை ஆட்டி வைத்த கோமாட்டி, என்றும் மன்னனிடம் தனக்கென எதுவும்