உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 31.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து லேகா

133

தேர்வின் திறத்துக்குச் சான்று பகர்பவையாய் இருந்தன.அவையே அவள் செல்வ நிலையையும் எடுத்துக்காட்டின.

காதில் கோத்துள்ள தோடுகள், கழுத்தில் பொன் சங்கிலியில் கோத்த ஒரு பன்மணிப்பதக்கம். கைகளில் தஞ்சாவூர்த் தட்டாரின் தனிவேலைப் பாடமைந்த பொன்பூட்டு வளையல்கள், கைவிரல்களில் காந்தள் பூவிலேறிய பலநிற வண்டுகள் போலக் காட்சியளிக்கும் ஒன்றிரண்டு மோதிரங்கள்! இவையே இந்துலேகாவின் அணிமணிப் பூண்களாயிருந்தன.

அவள் நீண்ட விழிகளின் ஒளி காதணிகளிலுள்ள வைரங்களின் செயற்கை ஒளியைக் கேலிசெய்தன. வெள்ளைக்காரப் பெண்களைப் போல அவள் உதடுகளுக்குச் சாயமிடமில்லை. ஆனாலும், அவன் ஆங்கிலம் படித்தவளாகையால், அவ்வாறு சாயமிட்டிருந்தாளோ என்று பலர் எண்ணியதுண்டு. இதழ்கள் அவ்வளவு இயற்கையாகச் செவ்வலரிப் பூக்களையும் மாதுளை மொட்டுக்களையும் பழித்த சிவப்புநிறம் தோய்ந்திருந்தன.

பருவங்கவிந்த களை அவள் முகத்திலும், வயதுக்கு மேற்பட்ட அறிவு அவள் நெற்றியிலும் காட்சியளித்தன. கடைந்தெடுத்த உடலின் வடிவமைதியை அளப்பவை போல அவள் நீலநிறஞ்செறிந்த கூந்தல் முதுகு கடந்து புரண்டது. முழுவதும் பின்னலிலும் சுருளிலும் அடங்காமல் ஒருசில பூங்கொத்துக்களின் ஆணையை மேற்கொண்டவைபோல அவை ஆங்காங்கே ஒதுங்கி நின்றன.

இளமையழகு அவள் அங்கமெங்கும் பரவிப் பொதுளிற்று. ஆனால் கன்னித் தாய்மையின் ஒளி, முகத்தில் தாண்டவமாடிற்று, அவள் தள தளப்பிலும் விம்மிய மார்பகங்களிலும் அது பொங்கி அவள் பெண்மைக்கு நிறைவளித்தது.

இந்துலேகாவின் தாய் இலட்குமிக்குட்டியம்மை,காரணவன் பஞ்சு மேனவனின் ஒரே பெண்செல்வம். அவள் இளமையிலேயே கிளிமானூர் அரசருக்கு வாழ்க்கைப் பட்டவள். இந்துலேகாவுக்கு இரண்டரை வயதாக இருக்கும்போது அவ்வரசர் காலமானார். அதன்பின் அவள் தன் தாய் குஞ்சுக் குட்டியம்மையுடன் பூவள்ளியில் தங்கினாள்.