(146) ||.
அப்பாத்துரையம் - 38
முன்னணியில் நிற்க வேண்டியவன் அவன்; போர்த் தலைவருள் தலைவராயிருக்க வேண்டும். நிலையுடையவன் அவனே. அப்படியிருக்க, எப்படிப் போரினின்றும் மீண்டு வருகிறவர் களிடம் போய் அவன் 'போரில் வெற்றியா தோல்வியா என்ற செய்தி வினவுவான்?
'இறைவா! நான் அஞ்சியவாறேதான் நிகழ்ந்து விட்டதோ? இறைவா! நீயே என் தீவினைகளுக்கு என்னைத் தண்டிக்கவேண்டும்! ஆம் அதுவுந்தான்: இதற்கேது தண்டனை? தற்பகைக்கும் தன் மகன் பகைக்கும் தக்கதண்டனை நரக வாழ்வின்றி வேறுண்டோ? இறைவா, என் பிழை பொறுப்பாய்” என்றிவ்வாறு பிதற்றி அறிவழிந்து நின்றான் ஹாட்ஸ்பரைப் பெற்ற தந்தை.
66
‘ஆ, தோல்வி என்பதற்கையமில்லை. ஆனால் என்மகன் என் ஒப்பற்ற மகன், என் போர்ச்சிங்கம் என்ன ஆனான்?
66
'ஆ, அன்று ஒரு மன்னனைத் தன்னையறியாமல் பறிகொடுத்து உயிர்விடத் துணிந்து நின்றானே அவ்விசயன்! இன்று யான் அவ் அபிமன்னனை ஒத்த நின்னை என் கையாற் கொன்று நின்றேனோ!
66
‘ஆ, என் மகனே, நீ இறந்தாயா? இருக்கின்றாயா? யார் பகர்வர்! யாரேனும் யாரேனும் இப்பக்கம் வந்ததாலோ அல்லது திரும்பினாலோ அல்லது சற்று நின்றாலன்றோ கேட்கலாம்” என்றெண்ணி நின்றான் அவன்.
அச்சமயம் பெருமகனொருவன் குதிரை மீதேறி ஓட்டமாக வந்தவன் நெடுந்தொலை ஓடி ளைத்தவனாய் அவன் வாயிலில் இறங்கி நின்றான்.
நார்தம்பர்லந்து அவனிடம் சென்று, "ஐயனே, போர் என்னவாயிற்று? என் மகன் - இல்லை ஹாட்ஸ்பர் நிலை என்ன? என்று கேட்டான்.
வந்தவன் நார்தம்பர்லந்தை ஏற இறங்கப் பார்த்தான் பின் குறும்பாக, "ஏன் உமக்குத் தெரியாதோ? மன்னர் படையும் போயிற்று; மன்னரும் போனார். இளவரசர் கூடப் பிழைக்க வில்லை. ஜானும் ஒரு சிலரும் தலைபிழைத்தது தம்பிரான் புண்ணியம் என ஓடினர்” என்றான்.