சேக்சுபியர் கதைகள் - 4
147
மிகத் தேறுதலான வாக்கு; உண்மை மட்டுமாயின் ஆனால், எதை நம்புவது, கண்ணையா காதையா?
அடுத்த தூதன் எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கினான். தந்தையின் நெஞ்சம் பதைத்தது. “ஆ! ரிச்சர்டு ரிச்சர்டு, எது பொய்ப்பினும் நின் நாப் பொய்க்காது. ஆ என் ஒரே பிள்ளையையா நீ பலி வாங்கவேண்டும். என் பகைவன் ஹென்ரியின் மகனைத்தான் பலி வாங்கக்கூடாதா" என்று கூறி அவன் நிலத்தில் வீழ்ந்தான். யாரும் அவனை வந்து தேற்றாமலே அரைநாழிகை கிடந்து பின் எழுந்தான். பின் விசயன் போலவே.“என் மகன் கொலைக்குப் பழி வாங்குவேன்" என்றெழுந்து அவன் கடற் கரையிலுள்ள தனது தனியிருக்கையாகிய வார்க்வர்த் கோட்டைக்குச் சென்றான்.
8. மீண்டும் ரிச்சர்டு நாவிற் பிறந்த பழி
மன்னன் தான் இதுகாறும் நொந்துகொண்ட இளவரசன் தனக்கு ஒரு கலங்கரை விளக்கமாய் உதவுவது கண்டு மனங்குளிர்ந்து முன்னையினும் ஊக்கத்துடன் தன் பகைவர்களை ஒறுக்கும் வேலையில் இறங்கினான். ஆனால், உளம் ஊக்கம் பெறினும் அவன் உடல் வளங்குன்றியதனால் இளவரசன் அவனுடன் உதவியாகச் சென்றான். முதன்முதல் அவர்கள் வென்றடக்க முயன்றது மலைநாட்டரசனாகிய வேல்ஸ் தலைவனையே அந்நாடு ஆங்கிலேயர் சென்றுபோர் புரிவதற் கேற்றதன்று. அகன்ற உயர்நிலம், குன்றுகள், பள்ளத்தாக்குகள், தலை குப்புற விழும் அருவிகள் ஆகியவை நிறைந்தது அந்நாடு. மலைநாட்டரசர்க்கன்றி வேறேவர்க்கும் உணவோ, இடமோ அளிக்காத நாடு அது. அதில் தங்குதடையின்றித் திரியும் குரக்கினப் படைபோன்ற வேல்ஸ் மக்களை அவர்களுக்குப் பல ஆண்டுகள் பிடித்தன.
அடக்க
இப்போர் தொடர்ந்து நடைபெறாது அவ்வப்போதே நடந்து வந்த தொன்றாகையால், இளவரசன் இடை இடையே ஓய்வு ஏற்படும் போதெல்லாம் லண்டனுக்கு வந்து நாட்டின் ஆட்சியிலும் தந்தைக்கான உதவிகள் செய்துவந்தான்.
ஃபால்ஸ்டாஃப் ஷுரூஸ்பரிப் போரில் காலாள் தலைவனாக இருந்தபோதிலும் வேல்ஸ் போராட்டத்தில்
"