150
அப்பாத்துரையம் - 38
சேர்ந்து நாம் நம் வன்மையிழந்து பகைவனுக்கே நாட்டை விட்டுவிட வேண்டாம்" என்றார்கள்.
அன்று நார்தம்பர்லந்தின் காலில் வந்திருந்து மகனை உதவாமற் பண்ணிய அதே ரிச்சர்டின் பழி, இன்று அவன் மனைவி புதல்வி ஆகிய இருவருடைய நாவிலும் வந்திருந்து ரண்டாவது கிளர்ச்சியையும் அழித்தது.
மன்னனாய் விட்ட ஹென்ரியைக்கூட விட்டு விட்டு, அந்த ரிச்சர்டை மன்னனாக்க உதவியவனும் அரசியல் பகையோடு நார்தம்பர்லந்தை அழிப்பதே கடன் என நின்றது அந்த ரிச்சர்டின் பழி.
தனக்குக்
குடிப்பகையானவனுமான
முதற் கிளர்ச்சிக்காரர் நின்றமாதிரியே நார்தம்பர்லந்துக் காக இரண்டாம் கிளர்ச்சிக்காரரும் காத்து நின்றனர். ஆனால் அவன் வரமாட்டானென்று பல நாட்களுக்குப் பின்னரே தெரிந்தது. என்ன செய்வது! படைகளை அணிவகுத்தாயிற்று. போர் நோக்கம் தெய்வீகமான தென்று கூறியதாயிற்று. வெற்றியோ தோல்வியோ முன்வைத்த காலைப் பின் வைக்கலாகாதென வீரருக்கு முழங்கி ஆயிற்று. இனித் தலைவர் பின்னடைவதெப்படி?
"தெய்வம் உங்கள் கைவாளில் நின்று உங்களுக்கு வெற்றியைத் தரும்” என்று வீறுடன் வீரருக்கு முழங்கிய அதே நாக்கு, இப்போது “தெய்வந்தான் நம் கைவாளில் நின்று நமக்கு வெற்றியளிக்க வேண்டும்" எனத் தணிந்த குரலில் கூரலாயிற்று.
9. கரைப்பட்ட வெற்றி
இளவரசன் இச்சமயம் மன்னனுடன் வேல்ஸில் போர் செய்து கொண்டிருந்தான் ஆகவே, அவன் ஃபால்ஸ்டாஃபை அனுப்பி ஜானை வடபுலக் கிளர்ச்சியை அடக்க ஏவினான். ஜானுடனேயே ஃபால்ஸ்டாஃபையும் அவனால் சேர்க்க இயன்ற படைகளுடன் செல்லுமாறு தூண்டினான்.
ஃபால்ஸ்டாஃபின் பெருமைக்கு இது மிகவும் உகந்த சமயம். அவன் தன்னிலையில் இருந்த காலத்தில் அவனுக்கு நண்பர்களாய் இருந்த தற்போது நலிந்து வருபவர்களான 'திருவாளர் பொள்ளலையும், திருவாளர் 2வாய்மூடியையும்