152
அப்பாத்துரையம் - 38
அதில் குடிமக்கள் குறைகள் எழுத்து மூலம் எழுதிக் கொடுக்கப் பெற்று அவை நீக்கப்படுவதாக வாக்களிக்கப் பட்டது. பட்டபின், இருபுறமும் படைகள் கலைவதெனவும் அவ்வப் பக்கத்துத் தலைவரால் ஆணைகள் தரப்பட்டன. ஆனால் சற்று நேரத்திற்குள் ஜானின் அருகிலிருந்த பெருமகன் ஒருவன், இருபுறப் படைகளையும் தலைவர்கள் முன்னிலையில் வரிசையாகப் போகச் செய்யலாமே என்றான். உடனே முன் உத்தரவை அகற்றிப் புது உத்தரவுகள் இருபுறமும் பிறப்பிக்கப்பட்டன.
>>
ஆனால், ஜான் முன்னமே தன் பக்கத்துப் படைகளிடம் "நான் நேரில் இடாத கட்ட டாத கட்டளைகளை நிறைவேற்ற வேண்டா என்று கூறியிருந்தான். அதன்படி படைகள் கலைவதென்ற முதல் உத்தரவு விலையற்றுப் படைகள் உலையாது நின்றன. கிளர்ச்சிக்காரர் பக்கமோ, 'படைகள் கலைக' என்ற உத்தரவு உடனே நிறைவேற்றப்பட்டு, இரைச்சலுடனும் குழப்பத் துடனும் கலைந்தன. இரண்டாம் உத்தரவு வருவதற்கு முன் படைகள் இருந்த இடமே தெரியாமல் ஆங்காங்கு ஒன்றிரண்டு பேரே மீந்து நின்றனர்.
இதனால், அரசர் பக்கம் தலைவர்கள் படைவன்மை குறையாதிருந்தனர். கிளர்ச்சிக்காரர் பக்கமோ படைகளே இல்லாமல் வெறும் தலைவர்கள் மட்டுமே தங்கி நின்றனர். அத்தறுவாய்க்கே காத்திருந்த வெஸ்டுமோர்லந்துப் பெருமகன் உடனே அவர்கள் முன்வந்து “நாட்டுப் பகைவர்களே, உங்களை விலங்கிடுகிறோம்" என்றான்.
அவர்கள் திடுக்கிட்டு, "இஃது என்ன ஐயன்மீர், அரசர் வாக்குறுதி இதுவா? என்று கேட்டனர்.
அதற்கு விடையாக “வாக்குறுதி குடிமக்களுக்கன்றோ? அவர்கள் குறைகள் தீர்க்கப்படுமென்பதில் தடங்கல் எதுவும் ல்லை. உங்களுக்கு யார் வாக்குறுதி கொடுத்தது? நீங்கள் பொதுமக்களை ஏமாற்றிக் கிளர்ச்சிக்குத் தூண்டியவர்களா யிற்றே. உங்களுக்கு அரசர் சட்டப்படி தண்டனை தரப்படும்” என்று கூறப்பட்டது. கிளர்ச்சிக்காரர் ஏமாந்தனர்.
மன்னர் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், இறைவன்