சேக்சுபியர் கதைகள் - 4
167
எனக்குத் தோன்றுகிறது. ஃபிரான்சு அரசன் மகனாகிய சார்லஸுக்கு மணம் செய்தால் என்ன?”
நகர மக்களுக்கு இது துன்பநேரத்தில் வந்த தெய்வ அருட்பேறுபோல் விளங்கிற்று. இதனைச் செவியுற்ற படை வீரரும், "தோல்வி என்ற பெயரின்றியும் சண்டையின்றியும் ற விடுபட்டோம்” என்று கலகலத்துக் கொண்டனர்.
3. கான்ஸ்டன்ஸின் பழி
ஆர்தருக்கு அரசாட்சி கொடுப்பதினின்றும் ஃபிரஞ்சு அரசனை எதிர்த்துப் போரிடுவதினின்றும் தவிர்தலின் ஜான் தனை ஏற்றான் என்று சொல்ல வேண்டுவதில்லை. ஃபிலிப் மட்டும் இதனை ஏற்றுச் சற்றுத் தயங்கினான். ஒருபுறம் இதனால் ஆங்கில நாட்டரசுகூட ஒருவேளை தன் மகனுக்கே வரக்கூடும் என்ற அவர் அவனை இழுத்தது; இன்னொருபுறம் அவன் மனச்சான்று ஆர்தருக்கு அவன் செய்யும் வஞ்சகத்தைக் குறை கூறிற்று. ஆனால், அதனைச் சரிபடுத்த ஜான் ஆர்தருக்கு ஆங்கியர்ஸையும், பிரிட்டனில் ரிச்மண்டு முதலியவற்றையும் கொடுப்பதாகச் சொல்லவே, அவன் தயக்கமின்றி அந்த உறவை ஏற்றான். அதன்படியே சார்லஸுக்கும் பிளான்ஷிச் சீமாட்டிக்கும் கடிமணம் நடந்தேறியது.
ஏழை ஆர்தரையும் அவன் தாய் கான்ஸ்டன்ஸையும் முதலில் தன் நலத்திற்காகத் தலைக்குமேல் ஏற்றிய ஃபிலிப் இப்போது அதே தன்னலத்தால் தூண்டப்பட்டு அவர்களை மீண்டும் துணையற்றவராக விட்டுவிட்டான்.
இங்ஙனம் தன் பகைவருடன் நண்பரும் சேர்ந்து தம்மைக் கைவிட்டனர் என்று கான்ஸ்டன்ஸ் கண்டாள். உலகியல் வாழ்வில் வாள்வலி இன்றேல் ஒழுங்கு என்பது மட்டிலும் தனிப்படப் பயனுடையதன்று என்பதை அவள் அறிந்து தற்காலிகமாகக் கிடைத்ததை ஏற்றுக் கொண்டிருந்தால் அவளுக்கும் அவள் மைந்தனுக்கும் வேறிடையூறின்றி வாழ்வாவது கொடுத்து வைத்திருக்கும். வாய்ப்பு நேர்ந்தால் வெற்றிகூடக் கிடைத்திருக்கலாம். ஆனால் ஊழ் யாரை விட்டது! அவள் தன் பெருந்- துன்பத்திலும், ஓங்கி எழுந்த தன் சினத்திலும்