உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 38

176 || பரிந்தோ பயனென்ன?' என்றிவ்வாறு பலபடி மனமுளைந்து இறுதியில் தேறிச் சிறைக்கூடம் சென்றான்.

பெண்ணென்றால் பேயும் இரங்கும்; பிள்ளையென்றால் பித்தும் இரங்கும்' என்பது பழமொழி; ஹியூபெர்ட், தன் கல்நெஞ்சையும் ஆர்தரது களங்கமற்ற மதிமுகம் கவர்ந்து, தனது மன உறுதியையும் துணிவையும் கலைத்துவிடுமோ, என்றஞ்சி முகத்தைத் திருப்பிக்கொண்டு சிறையினுட் சென்றான். அவன் பின் இரும்புக் கம்பியைக் காய்ச்ச உதவவேண்டி மூன்று காவலாளிகள் காலன் கையாட்கள்போல் உடன் புகுந்தனர்.

9. சிறுவன் அடைந்த வெந்துயர்

என்றும், வரும்போதே தன்னை நோக்கி வரும் ஹியூபெர்ட் மாமா இன்று முகந்திருப்பிக் கொண்டு வருவதையும் அவருடன் கூடப் புதியவராக அச்சந்தரும் உருவும் நடையும் கைக்கருவிகளும் உடைய மூவர் வருவதையும் கண்டு ஆர்தர் சற்றே அஞ்சினான். அஞ்சி, "மாமா, மாமா, என்னை ஏன் பார்க்காமல் போகிறீர்? நான் இன்று குறும்பு ஒன்று செய்யவில்லையே நல்ல பிள்ளையாய் என் வேலையைச் சரியாய் முடித்து விட்டு உங்களுக்காகக் காத்திருக்கிறேன். எனக்கு உங்கள் முத்தம் தரப்படா? மாமா!" என்றான்.

எதிர்பார்த்த இன்குரல், இன்று அவனுக்குப் பெருந்தடங் கலாய் அவன் துணிவுக் கோட்டைகளுக்குப் பேரிடியாயிற்று; கோட்டையின் வெளிச்சுவர் துளைக்கப்பட்டது; உட்சுவர் நகர்ந்தது; கடுமனைகூட அதிர்ந்தது. ஆனால் வெளிக்கு மாறுதல் எதனையும் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

கையாட்களுள் ஒருவன், விழுங்கும் பார்வையாக முறைத்துப் பார்த்து, “டேய், பேசாதிரு; அல்லது உன் வாயை மூடிவிடுவேன்” என்று கூறிவிட்டு சென்றான். உள்ளே சென்ற நால்வரும் அரைமணி நேரம் காணவில்லை.

ஆர்தருக்கு ஒன்றும் புரியவில்லை. இன்று ஏதோ புதிய செய்தி நடக்க இருக்கிறது என்றமட்டில் அவன் சிறிய மூளைக்கு எட்டியது. அல்லாவிடில் ஹியூபெர்ட் மாமா இப்படிப் பேசாமல்

போகமாட்டார்.