சேக்சுபியர் கதைகள் - 4
195
அவ்வுருவம் பேசுவதையும் அதுவும் அதேனிய மொழியில் பேசுவதையும் கேட்டுத் திடுக்கிட்டான். பின் அவ்வுருதான் அதேன்ஸின் பகைவன் என்று கூறக் கேட்டதும் அது பேயாயிருந்தாலும் தனக்குதவி செய்ய வல்லதாகக் கூடும் என நினைத்து அச்சந்தவிர்த்து அதனை நோக்கி, “அரைவிலங்கு உருவமுடைய புதுமையான அரைமனிதனே! பொறு; நீ பேயாயினுமாகுக. மனிதனாயினும், அன்றி விலங்காயினு மாகுக. ஒரு செய்தியில் நீயும் நானும் ஒன்று. நானும் அதேன்ஸின் பகைவன்; நீயும் அதேன்ஸின் பகைவன். நீ அதேன்ஸினை அழிக்க விரும்பிக்கொண்டு இங்கு வாளா காட்டில் கிடக்கிறாய். நான் அதேன்ஸை அழிக்கச் சூள் உரைத்து அதற்கான முன்னேற்பாடுகளுடன் இதே காட்டில் காத்திருக்கிறேன்; எனக்கு நீ உதவக்கூடுமா?” என்றான்.
66
தைமன் அவனைக் கண்டும் காணாதவன்போல் பரக்க நோக்கி, ஆ, என்ன அடம்! உதவியா உனக்கா? மனித உருவுடைய, அதேனிய உருவுடைய உனக்கா? ஒருகாலும் இல்லை. வேண்டுமானால் நீ அதேனியன் பகைவன் என்று கூறுவதனால் நீ மனிதனாயினும் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். அது ஒன்றுதான் உனக்கு நான் செய்யக் கூடும் உதவி" என்று கூறினான்.
அவன் பேச்சிலிருந்தும் அவன் கூறிய குறிப்புக்களி லிருந்தும் அல்சிபியாதிஸ் அவன் தைமனே என்று அறிந்து கொண்டான். உடனே அவன் தைமன் காலடியில் வீழ்ந்து, “அறிந்தேன், அறிந்தேன், எம் வள்ளற் பெருந்தகையே! எம் வீரப் பெருந்தகையே, அறிந்தேன். வாள்வலியால் அதேன்ஸின் பகைவர்களை அழித்த பெருமை போதாதென்று, அதேனியரையும் பிறரையும் கொடையாலும் வள்ளன்மையாலும் வெட்கித் தலைகுனியச் செய்த மன்னனே! தம்மை இந்நிலையில் காணப்பெற்றனே! தம் உருமாறி எம்முடன் எழுந்தருள்க! இவ் அதேனியப் பதர்களை அழித்துப் புதியதோர் அதேன்ஸை நிறுவி அதில் உம்மை முடிசூடா மன்னாக்குவேன், வருக!' என்று கண்ணீர் கால்களைக் கால்களைக் கழுவ விழுந்து கிடந்து புலம்பினான்.