உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(202

அப்பாத்துரையம் - 38

அவனுக்குமுன் அரசனாயிருந்த அவன் தந்தை போரில் மிகவும் விருப்பமுடையவன். அதற்கேற்ப அவன் தன் நண்பனான ஃபிரான்சு அரசன் போர்களில் சென்று அவனுக்கு உதவிசெய்து அதற்காக அவ்வரசனிடமிருந்து நூறாயிரம் வெள்ளியையும் அக்குவிதேன் என்ற செழித்த மாவட்டத்தையும் பரிசாகப் பெற்றிருந்தான்.

நாவாரின் புதிய அரசன் இத்தந்தையைப் பின்பற்றிப் போரிலீடுபடாமல் கல்வி கேள்விகளிலும் துறவோரிடத்திலும் பற்றுடையவனாய் அறிவு முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிகள் நடத்தலானான்.

அரசனுக்கு இக்கலையாராய்ச்சித் துறையில் அவனது நண்பர்களான 2பைரன், 3லாங்கவில், 4துமெயின் ஆகியவர்கள் உதவ முன்வந்தனர். அனைவருமாகச் சேர்ந்த இவ்வாராய்ச்சி களை வெற்றி பெற முடிக்கும்வரை பெண்களுடன் உறவாடவோ அவர்களை அரண்மனைப்புறம் வரவிடவோ செய்வதில்லை என்றும், ஆடல் பாடல் முதலிய கேளிக்கைகளில் கலப்பதில்லை என்றும் நோன்பு கொண்டனர். அரண்மனைக்குள்ளே பிறர் எவரும் இத்திட்டத்தை மீறக் கூடாதெனக் குடிகளும்

எச்சரிக்கப்பட்டனர்.

கொஞ்ச நாளைக்குள் நண்பர்களின் இப்புதுவகையான நோன்பிற்குப் பல இடையூறுகள் நேர்ந்தன.

அவற்றுள் முதன்மையான

ஏற்பட்டது.

டையூறு அரசனுக்கே

அக்குவிதேனை நாவாருக்களித்த ஃபிரான்சு அரசன் இறந்தபின் அவன் மகனான அடுத்த ஃபிரான்சு அரசன் அதனைத் திரும்பவும் பெறும் எண்ணத்துடன் பல தூதர்களை அனுப்பிப் பார்த்தான். நாவார் அரசனோ போர்செலவுக் கீடாகவே அது தன் நாட்டுக்குக் கொடுக்கப் பட்டது என்றும் அதனுடன் கொடுக்கப்பட்ட தொகையாகிய நூறாயிரம் வெள்ளிகளும் செலவின் ஒரு பகுதியேயாகும் என்றும் கூறினான்.

ஃபிரான்சு அரசன் எப்படியாவது அக்குவிதேனை அடைய

வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். ஆகவே, தன் அரசுக்குரிய இளவரசியையும் நாவார் அரசனையும்