இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5. ஐந்தாம் ஹென்ரி (Henry V)
கதை உறுப்பினர்
ஆடவர்:
1. ஐந்தாம் ஹென்ரி அரசன்: இளமையில் ஹென்ரி இளவரசன்.நான்காம் ஹென்ரியின் மகன்; மூன்றாம் எட்வர்டுப் பேரரசன் இவன் முன்னோன்.
2. சார்லஸ்: பிரான்சு நாட்டு அரசன்.
L
3. டாஃபின்: பிரெஞ்சு இளவரசன்.
4. ரிச்சர்டு: கேம்பிரிட்ஜ் கோமகன் ஒன்றுவிட்ட உடன்பிறந்தான் - சூழ்ச்சிக்காரன்.
அரசனின்
5. ஸ்க்ருப் பெருமகன்: அரசன் பள்ளித்தோழன். சூழ்ச்சிக்காரன்.
6. தாமஸ் கிரேப் பெருந்தகை: சூழ்ச்சிக்காரன்.
7. கிளஸ்டர் கோமகன்: அரசன் உடன்பிறந்தான்; படைத் தலைவன்.
8. பெட்போர்டுக் கோமகன்: படைத்தலைவன்.
9. எக்ஸ்டர் பெருமகன்: ஹென்ரி அரசன் தூதன்.
10. தாமஸ் எர்ப்பிங்ஹாம் பெருந்தகை: முதியோன்; படைத்தலைவன்.
11. ஃபால்ஸ்டாஃப்ஃ: அரசன் பழந்தோழருள் தலைவன்; புறக்கணிப்பால் இறந்தவன்; அரசன் பழந்தோழன்.