உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

231

இங்கிலாந்திலிருக்கும் எண்ணற்ற வீரரில் ஒரு சில ஆயிரவர் இங்கு உடனிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும்! என்றான்.

அரசன் அதுகேட்டுத் தலையசைத்து, “இல்லை, இல்லை. ஒருபோதும் அங்ஙனம் விரும்பற்க, இறப்பதாயின் சிலர் இறப்பது மேம்பாடுதானே! ஆயின், வெற்றி வருவதாயின் அப்புகழைப் பங்கிட ஆள் எத்தனை குறைவோ அத்தனையும் பங்கு மிகுதியன்றோ? இன்று போரில் நின்று இறப்பவரையும், வென்று மீள்பவரையும் பலகாலம் இங்கிலாந்து போற்றுமன்றோ? அவ்வழியாப் புகழில் பங்கு கொண்டு நம்புகழைக் குறைக்க ஆயிரமல்ல; ஒருவர் கூடக் கூடுதலாக வந்து சேரவேண்டுமென்று நான் விரும்பேன்,” என்றான்.

நகைச்சுவை பொதிந்து வீரமும் அருளும் கனிந்த அரசன் சொற்கள் ஆங்கில மக்கள் உள்ளத்தில் கரந்துகிடந்த விலங்கியல் மாசகற்றி, மாந்தருள்ளும் மேம்பட்ட உயர் வீரநிலை தந்தன.

மீது

போருக்குரிய இருப்புடைகூட இல்லாத நிலையிலிருந்து ஆங்கிலவீரர் துணிகரமாக ஃபிரெஞ்சுப்படை மோதலாயினர். அவர்களின் அவலநிலை கண்டு இவர்களுடன் சண்டையிடப் போரணிகூட வேண்டுமா என்று ஏளன எண்ணத்தால் படைத்தலைவன் ஆணை கடந்து ஃபிரெஞ்சுப் படைஞர் சிதறி நின்றனர். சிலர் ஆங்கிலேயர் தாக்குவதுவரைக் காத்திராது தாமாகச் சென்று தாக்கினர். இந்நிலை கண்டு ஹென்ரி ஆங்கிலவீரரைத் தம் ஈட்டிகளை முன்னிறுத்திக் கோட்டை செய்து அதன் பாதுகாப்பலிருந்து கொண்டு அம்புகளைப் பகைவர்மீது ஏவுமாறு தூண்டினான். அதனால் பட்டவர் பலர்; அதிலிருந்து பிழைக்க ஓடுபவரால் தள்ளுண்டு நெக்குண்டழிந்தவர் பலர்; அப்படியும் பெருந் தொகையினரான ஃபிரெஞ்சுப் படைஞர் கலங்காமல் ஆங்கில வீரர்களைச் சிதறடிக்க முயன்றனர். ஹென்ரி தன் படைஞர்களை இருபுறமும் பிரித்துப் பக்கத்திலுள்ள காடுகளுக்குள்ளிருந்து அம்புமாரி வீச ஏவினான். இத்தகைய போர்த்திறத்தினால் ஹென்ரி கடல்போலிரைந்து வந்த ஃபிரெஞ்சுப் படைகளை எளிதில் கலைத்து வெற்றி வீரனாய்த் திகழ்ந்தான். பிற போர்களில் போர்வீரர் தலைவனாய் மட்டும் இதுவரை விளங்கிய அவன்,