உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(232

அப்பாத்துரையம் - 38

ன்று அதோடு நாட்டுக்கவிஞர் பாடல்களின் தலைவனாகவும் விளங்கினான்.

போர் நடந்த இடம் அஜின்கோர்ட்டு என்ற ஊரின் பக்கத்தில் இருந்ததனால் அது வரலாற்றில் அஜின் கோர்ட்டுச் சண்டை எனப் பெயர் பெற்றது. அதில் இறந்த ஃபிரெஞ்சுவீரர் பதினாராயிரத்தினும் மிக்கவர். இறந்த கோமக்களும் பெருமக்களும் நூற்றிருபதினும் மிக்கவர். ஒப்பற்ற படைத்தலைவர் பலர் ஆங்கில மக்கள் கையில் சிறைப்பட்டிருந்தனர். ஆனால், ஆங்கிலேயர் பக்கத்தில் படைவீரருள் இறந்தவர் இருபத்தைந்து பேரே. தலைவருள் யார்க்குக் கோமகனும், சஃபோக்குக் கோமகனும் இறந்துவிட்டனர். இத்தனை சிறிய இழப்புடன் சிறுபடை நின்று பெரும் படையை வென்றது கண்டு வியாதவர் இல்லை. அரசன் இன்மையுட் காட்டிய இறை எண்ணம் சிறிதேனும் மறவாது, “ஆண்டவனே, இஃது உன் கைவரிசையே யன்றி வேறன்று,' என்றான். ஆங்கிலவீரர் அனைவரும் இவ்வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தம்மையோ தம் வேலையையோ அரசனையோ புகழாது இறைவனையே புகழ்தல் வேண்டும் என்று ஆணையும் தந்தான். ஆனால், இவ்வொரு வகையில் அரசாணையை மதிப்பவரில்லை. ஆங்கில நாடெங்கும் முன் பின் கேட்டறியா இவ்வெற்றியால் வெறிகொண்டு அரசனை வாயாரப் புகழ்ந்து நெஞ்சார வாழ்த்திற்று.

""

வெறும் லத்தீன்மொழி வீரனாயிராது போரிலும் பெருவீரனாய்ச் செயலாற்றிய ஃபுளூவெல்லின் ஆண்டி ல் முதிராதஹென்ரி அரசன் போரில் காட்டிய ஒப்பற்ற திறங்கண்டு வியந்து அதனைத் தன் இயற்கைக் கேற்பப் பழ வீரருடன் இணைத்துக் கூறிக் கொக்கரித்தான். “எம் அரசர் ஜூலியஸ் ஸீஸரினும் மிக்கவர்; தற்கால அலெக்ஸாந்தர் என்றும் கூறலாம். மேலும், அலெக்ஸாந்தர் பிறந்த மாசிதோனும் எம் அரசர் பிறந்த மான்மத்தும் மகரத்திலேயே தொடங்குகின்றன அன்றோ? அம்மகரம் வெற்றிக் கறிகுறியான மகர மீனையன்றோ குறிக்கும்? அன்றி மாசிதோனிலும் ஒரு மலையுண்டு; மான்மத்திலும் ஒரு மலை இருக்கிறது. மாசிதோனில் ஓர் ஆறு; மான்மத்திலும் ஓர் ஆறு. என்ன நெருங்கிய ஒப்புமை!” என்பான்.