262
அப்பாத்துரையம் - 38
வெற்றி பெறவில்லை. நேர்மாறாக எலிசபெத் அவன்மீது எதிரி ஹென்ரி ரிச்மண்டுக்கே மணம் செய்வித்தாள். இங்ஙனம் உரம் பெற்ற ஹென்ரி இங்கிலாந்தின்மீது படையெடுத்து பாஸ்வொர்த் சண்டையில் ரிச்சர்டைக் கொன்று ஏழாம் ஹென்ரியாக இங்கிலாந்தின் அரசுரிமை பெற்றான்.
1. எட்வர்டு அரசனும் ரிச்சர்டும்
இங்கிலாந்தின் மன்னருள் வாழ்க்கை முற்றிலும் துன்பத்துக்காளான தீவினையாளன் ஆறாம் ஹென்ரி அரசனே. ஆனால், வாழ்க்கை முற்றிலும் பிறருக்குத் துன்பமே இழைத்துப் படுகொலைகளையும் தீச்செயல்களையும் அஞ்சாது செய்த அரசனும் உண்டு; அவனே மூன்றாம் ரிச்சர்டு. தன் அண்ணனாகிய நான்காம் எட்வர்டு அரசனாயிருக்கும் போது அரசுரிமைக்கு முன்னேற்பாடாக அவன் செய்த கொலைகள் பல. அதன்பின் அவன் அவ்வுரிமையைக் காக்க இயற்றிய செய்லகள் அவற்றினும் மிகுதியாகவும் அவற்றை விடக் கொடுமையான வையாகவும் இருந்தன.
ஆறாம் ஹென்ரி அரசன் மணிக்கூண்டில் சிறைப்பட்டிருந் தாலும், அவன் பெயராலும் அவன் மகன் எட்வர்டு இளவரசன் பெயராலும் அவன் மனைவியாகிய மார்கரட் பெண்புலிபோல் மீண்டும் மீண்டும் பாய்ந்து வந்து சண்டை செய்துவந்தாள். எட்வர்டின்மீது பொறாமை கொண்ட வார்விக் கோமகனும் எட்வர்டின் தம்பி 'கிளாரன்ஸ் கோமகன் ஜியார்ஜும் அவள் பக்கம் சென்று சேர்ந்தனர். அவள் அவர்கள் உறவை வலியுறுத்தும் படி எட்வர்டு இளவரசனுக்கு வார்விக்கின் புதல்வியாகிய ஜேன் பெருமாட்டியையும் கிளாரென்ஸுக்கு வார்விக்கின் இன்னொரு புதல்வியையும் மணம் புரிவித்தாள். ஆனால் ட்யூக்ஸ்பரிச் சண்டையில் அவளுடைய ரு கோட்டைகளும் தகர்ந்தன. கோழையாகிய ஜியாஜ் மீண்டும் அண்ணனுடனேயே சென்று சேர்ந்து கொண்டான். போரில் ளவரசனும் சிறைப்பட்டு விடவே, அவனை எட்வர்டு அரசனும் ரிச்சர்டும் குருதியாறோட வதைத்துக் கொன்றார்கள். தன் போர்களுக்கெல்லாம் உயிர்நிலையான மகனைப் பறிகொடுத்த மார்கரட் பழி ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் மறந்து அவர்களை வாயார வைது தூற்றி வந்தாள்.