உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேக்சுபியர் கதைகள் - 4

3.

(273

த யோனிஸா: கிளியோன் மனைவி, மரீனாவை வளர்த்துச் சூழ்ச்சியால் கொலை செய்ய முயன்றவன்.

4. தயீஸா: ஸைமனிடிஸின் புதல்வி, பெரிக்ளிஸ் மனவிை, மரீனா தாய்.

5.

பைலாட்டென்:

ஆகியவர்களின் புதல்வி.

கிளியோன்

தயோனிஸா

கதைச்சுருக்கம்

டையர் நகரின் இளைஞனான அரசன் பெரிக்ளிஸ் அன்டியோக்கஸ் என்ற பேரரசனைப் பகைத்துக் கொண்டதனால் அவனுக்கஞ்சி நாட்டின் ஆட்சியை ஹெலிக்கானஸ் என்ற பெருமகனிடம் விட்டுவிட்டுச் சிலநாள் தார்ஸஸ் நகரில் சென்று மறைந்து தங்கினான். அங்கே பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவு உதவியதனால் அந்நகர்த் தலைவன் கிளியோன். அவன் மனைவி தயோனிஸா ஆகியவர்களால் பாராட்டப்பட்டிருந்து தான் அங்கிருந்தும் புறப்பட்டுக் கடலிற் புயலால் மரக்கலமுடையக். கிரீஸைச் சார்ந்த பென்டாப் பொலிஸில் மீன் படவரால் கொண்டு சென்று ஆதரிக்கப்பட்டான். பென்டாப் பொலிஸி அரசனான சைமனிடிஸ் மகள் தயீஸாவை மணக்கக் காத்திருந்த அரசிளஞ் செல்வருடன் சென்று பெரிக்ளிஸ் தயீஸாவின் காதலைப் பெற்று அவளை மணந்துகொண்டான்.

அதற்குள் அன்டியோக்கஸ் இடிவீழ்ந்து இறக்க, டையரிலுங் மக்கள் ஹெலிக்கானஸை அரசனாகும்படி வற்புறுத்த, அவன் அவர்களிடம் பெரிக்ளிஸைக் கண்டுபிடிக்க நாடுகளுக்கும் சுற்றறிக்கையாக விடுத்தான். அது கேள்விப் பட்டுப் பெரிக்ளிஸ் கருவுற்ற மனைவியுடன் கப்பலில் வருகையில் தார்ஸஸ் பக்கம் புயலிடையே தபீஸா பெண்மகவீன்று இறந்ததாக எண்ணப்பட்டுக் கடலில் பெட்டியில் வைத்து மிதக்கவிடப் பட்டாள். குழந்தை மரீனா தார்ஸஸில் கிளியோனிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அயர்ச்சியால் பிணம்போல் கிடந்தவளான தயீஸா எபீஸஸில் செரிமான் என்ற மருத்துவ அறிஞரால் அயர்ச்சி அகற்றப்பெற்று, அங்கே தயானா என்னும் தெய்வம் உறையும்