உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(292

அப்பாத்துரையம் - 38

கொள்ளாமல் அவன் உள்ளத்தடத்தின் ஆழத்தில் இன்னொரு பேரவாக் கரந்து கிடந்தது. ஆகவே எப்படியாவது தானே திருப்பெருந் தந்தையாய் விட வேண்டும் என்பது. அதற்காக அவன் பிறநாட்டு மன்னருக்கும் மடங்களுக்கும் பொருளை வாரி வாரி இறைத்து வந்தான்.

ம்

இச்செலவுகளுக்கும்

உல்ஸியின் வெளிநாட்டுப் போர்களுக்கும் ஆன பெரும்பொருளிற்கீடாக நாட்டில் வரிப்பளுவை மிகுதிப்படுத்த வேண்டி வந்தது. அது கண்டு பொதுமக்கள் மனமுளைந்தாலும் அரசனைப் பற்றியோ அரசனிலும் வன்மை படைத்தவனாகத் தோற்றிய உல்ஸியைப் பற்றியோ அவர்கள் ஒன்றும் கூறத் துணியவில்லை. பெருமக்களுள் ஒருவர் இருவர் அவனை எதிர்க்கத் துணிந்த போதும் உல்ஸி அவர்களை எளிதில் அரசனாணையாகிய இரும்புப் பொறியை ஏவி அழித்து வந்தான். ஆனால், நாளடைவில் அவனுடைய பெரிய ஆரவார வாழ்க்கையையும் செருக்கையும் துணிவையுங் கண்டு முன் அரசரையும் ஆட்டிவைத்த வகுப்பினரின் கால்வழியினராகிய பெருமக்கள் அழுக்காறடைந்து புழுங்கினர்

பெருமக்களுள் செல்வாக்கில் மிக்கவன் 'பக்கிங்ஹாம் கோமகன். அவன் நாட்டினிடத்தும் அரசனிடத்தும் பற்றுக் கொண்டவன். ஆனால், பெருமக்களிடையே பிறவாது பெருமக்களினும் பெருமிதமாக வாழ்ந்த உல்ஸியை மற்றப் பெருமக்களைப் போலவே அவனும் வெறுத்தான். உல்ஸியின் அடாச் செயல்களைத் துணிந்து அரசனிடங் கூற அவன் முயன்று வந்தான். இதனை அறிந்த உல்ஸி அவன் பேரில் நாட்டுப் பகைமைக் குற்றஞ்சாட்டி வழக்குமன்ற ஆராய்ச்சி இல்லாமலேயே அவனைச் சிறையிலடைத்தான். அதன்பின் அவன் பக்கிங்ஹாமின் 2நிலமேற்பார்வை யாளனையும் 3 குடும்பத்துக் குருக்களையும் பக்கிங்ஹாமுக்கெதிராகச் சான்று பகரும்படி ஏற்பாடு செய்து வைத்தான்.

ஒருபுறம், உல்ஸி தனக்கெதிராகச் சூழ்ச்சி செய்வதையும் இன்னொரு புறம் வரிப்பளுவை உயர்த்திப் பெருமக்களை அவமதிப்பையும் கேள்விப்பட்டு அரசன் தலைமையில் பக்கிங்ஹாமைக் குற்றஞ்சாட்டு வதற்காகக் கூடிய பெருமக்கள்