சேக்சுபியர் கதைகள் - 4
295
எண்ணத்துடன் நயமாக அவன் அவளைப் படிப்படியாக நீக்க எண்ணுவதையும் கண்டு அவள் உள நைந்தாள். அவளைவிடச் சற்றுக் கற்பிற் குறைந்த எந்த மாதும் இத்தகைய நிலைமையில் உலலெகலாம் ஆட்டி வைக்கும் திறனுடைய தன் மருமகனுக்குச் செய்தி தெரிவித்திருப்பாள். ஆனால், கற்பரசியாகிய அவளுக்குக் கணவனுக்கு மேற்பட்ட கருத்து எதுவுமில்லை. அவள் காதல் நிறைந்த கடிதங்கள் எழுதினாள். கல்வியிலும் அவள் கரை போனவளாதலால் தன் திருமணம் நேர்மையானதென்று மறைமொழி முதலியவற்றை மேற்கோள் காட்டி எழுதினாள். வழக்குமன்றங் கூடுவதாக அவளுக்கு அழைப்பு வந்தபோது அவள் பிடிவாதமாகத் தன் கணவனிடத்தன்றி வேறு எந்த மன்றத்துக்கும் தான் போவதில்லை என்று மறுத்துவிட்டாள்.
66
அவள் நிலைமையையும் பெருமிதத்தையும் வெறுப்பிடையேயும் கூடக் கண்ட அரசன் அவளிடத்திலேயே உல்ஸி, கம்பீஜியோ ஆகிய இரு ஆணையாளரையும் கூட்டி வழக்காடப் பணித்தான். முறைப்படி அரசன் வழக்காளியாகவும் காதரீன் எதிர் வழக்காளியாகவும் வழக்குத் தொடங்கப் பெற்றது. ஆனால், அது நடைபெறுமுன் காதரீன் கல்லுங் கரையும்படி கதறியழுது அரசன் காலில் வீழ்ந்து, அண்ணலே! எனக்கெதிராகத் தங்களுக்கென்ன வழக்கு? ஆண்டவன் சான்றாக மனைவியானபின் அங்ஙனம் மனைவியாயிருக்கும் உரிமை நீங்கலாக உயிரைக் கோரினும் வழக்கின்றி அளிக்க வேண்டிய வளாயிற்றே நான். நான் தங்களிக்கிழைத்த தீங்கென்ன? தீங்குண்டாயின் தக்க ஒறுப்புத் தாங்களே தரலாமே! தங்களின் மிக்க தீர்ப்பாளர் எனக்கு யார்? மனைவி என்ற உரிமை ஒருபுறமிருக்க, இந்நாட்டில் வாழ்பவள் என்ற முறையிலும் இந்நாட்டரசராகிய தாங்களின் மிக்க வழக்குத் தலைவர் வேறு யாருளர்? ஆதலின், என் உயிரனைய தலைவ! எனக்கெதிராக வழக்காடற்க, என்னை எது செய்யினும் என் கற்புரிமையை மறுக்கற்க.என்னிடமிருந்து எவ்வாறேனும் பிரிய வேண்டுமென்று உண்டானால் என் உயிர் கொள்க!” என்றாள்.
அவன் ஆண்மையையும் உணர்ச்சியையும் தூண்ட அவன் அவளை விட்டு விலகி, நயந்த ஆயின் அன்பற்ற குரலில், “நீ யாதொரு குற்றமும் செய்ததாக யாரும் கூறவில்லை. உன் ஒப்பற்ற குணம் என்னை மட்டுமின்றி இந்நாட்டு மக்கள் அனைவரையும்