(296) ||
அப்பாத்துரையம் - 38
உன்பால் ஈடுபடுத்தும். நீ ஒப்பற்ற மனவிை; நாட்டுமக்கட்குத் தாய். ஆனால், நான் தெய்வத்தின் வெறுப்பிற்கு அஞ்சுகிறேன்; நாட்டு மக்கள் குறைச்சொல்லுக்க அஞ்சுகிறேன். இந்நிலையில் என் விருப்பத்தையும் மீறி நடக்கிறேன். வெளிக்கு எதிர் வழக்காளியாகிய என்னுடைய உள்ளமே உனக்காக வழக்காடுகிறது. ஆகவேதான் உன் பக்கம் பேச அறிஞரை வைத்திருக்கிறேன். உல்ஸி என்னுடன் தொடர்புடையவன் என்பதற்காகக் கம்பீஜியோவையும் தீர்ப்பில் பங்குகொள்ள அழைத்திருக்கறேன்” என்றான்.
அரசன் உள்ளக் கருத்தை மறைத்துப் பேசுகிறான் என்று கண்ட காதரீன் கொதிக்கிற் துன்ப வெப்பத்தை அடக்கியவளாய் உல்ஸி பக்கம் திரும்பி,"நயவஞ்சகமும் நெஞ்சகத்தில் இரண்டகமும் கொண்ட அறிவுடையோய்! இஃதனைத்தும் நின் சூழ்ச்ச என்றறிவேன். உன் பேரவாவிற்காக என் செய்யத் துணிந்தனை? ஒரு குடியைக் கெடுக்கின்றாய்; ஓர் அரசனைத் தீவழியில் உய்க்கின்றாய்! சமயப் போர்வையுள் இத்தனை அடாச்செயலையும் செய்யும் உன் உள்ளம் இன்று உலக வெற்றியின் மேற்பட்ட இறைவனில்லை என்று தருக்க நிற்கின்றது. விரைவில் உன் செயலின் பயனின்மையை அறிவாய்” என்றுரைத்தாள்.
உல்ஸிமீதும் தன்மீதும் பொய்ம்மைக் குற்றஞ்சாட்டிய காதரீன் உரைகளை மாற்ற அரசன் தன் ஒழுங்கைக் கூறியதுடன் தன்னை இவ்வகையில் திருத்தித் தன் கடமையைக் காட்டியவன் லிங்கன் தலைமகன் என்றும் அவன் வாயுரையாலேயே விளக்க முயன்றான். ஆனால், அவற்றை ஒன்றையும் வாங்கிக் கொள்ளாமல் காதரீன் தான்
வழக்காடுவதானால் ஸ்பெயினிலிருந்து தன் உறவினரும் துணைவரும் வரும் வரை வழக்கை ஒத்திபோட்டேயாக வேண்டும் என்று கூறி வழக்கு மன்றத்தைப் புறக்கணித்து வெளியேறிவிட்டாள்.
4. கட்டுத்தறியை முறித்த மதயானை
காதரீன் எவ்வளவு நல்லவளாயினும் சரி பெருந்தன்மை யுடை வளாயினும் சரி, வழக்கு மன்றத்தில் அவள் எப்படியோ தன் தற்பெருமையைக் குலைத்துத் தன் மனக்கோட்டைகளுக்குத் ங்கல் செய்ய முனைகிறாள் என்று அரசன் கண்டதே அவன்
தட