உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




310

||--

அப்பாத்துரையம் - 38

பார்த்துக் கொண்டனர். ஆனால் பப்டிஸ்டா, “இன்னும் வராமலிருக்கும் மூன்றாவது மறுப்பு இவ்விரண்டையும் மறக்கச் செய்வதாயிருக்கும். இவை அவற்றிற்கு ஒரு பாயிரமட்டுந்தான்” என்றான்.

பப்டிஸ்டா வாய் மூடுமுன் காதரீன் புன்முறுவலுடன் முன்வந்து நின்றாள். கையில் அவள் தைத்துக் கொண்டிருந்த பூவேலையுடன் ஊசியும் நூலும் இருந்தன. தந்தைக்கு வணக்கஞ் செலுத்தியபின் ஊசி. நூல் முதலியவற்றை அங்கிருந்த படிப்பலகை ஒன்றில் வைத்துவிட்டுக் கணவனை நோக்கித் “தங்களுக்கு என்ன வேண்டும்?” என்றாள்.

தாம் காண்பது கனவா, நனவா என மற்ற ரு காதற்கணவரும் பப்டிஸ்டாவும் விழித்தனர்.

பெட்ரூக்கியோ மீண்டும் அவள் உயர்வினைக் காட்டும் எண்ணத்துடன், “உன் தோழியர் எங்கே?” என்றான்.

நான்

காதரீன்: அவர்கள் சதுரங்கத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுடன்

செய்துகொண்டிருந்தேன்.

பேசிக்கொண்டே

பூவேலை

பெட்ரூக்கியோ: சரி, அவர்களை நாங்கள் அழைத்ததாகக் கூறாமலே இப்பக்கம் இட்டுக் கொண்டுவா.

காதரீன் ‘சரி' என்று சென்று சில வினாடிகளுக்குள் வளையல்காரர் வந்திருப்பதாகக் கூறி மற்ற இருவரையும் அப்பக்கமாக அழைத்து வந்தாள். தங்கள் தங்கள் கணவரும் தந்தையும் இருப்பது கண்டு காதரீனை நோக்கி அவர்கள், “ஏன் எங்களை ஏய்த்து இப்புறம் கூட்டி வந்தாய். நீ கூறியது மாதிரி இங்கே வளையல்காரர் யாரும் காணோமே” என்றனர்.

66

காசுக்கு வளையிலிடுபவர் இல்லைதான். காதலுக்கு வளையிலிடு பவர்கள் இருக்கிறார்கள்" என்று கூறிக் காதரீன் புன்முறுவல் பூத்து நகைத்தாள்.

லூஸெந்தியோவும் ஹார்ட்டென்ஸியோவும் வெட்கித் தலைகுனிந்து தம் பந்தயந்தர ஒத்துக் கொண்டனர். பப்டிஸ்டா புதிதாக இன்னொரு மகள் பிறந்து வளர்ந்து விட்டாலென்ன