சேக்சுபியர் கதைகள் - 4
வீரன்.
16. நெஸ்டார்: கிரேக்க வீரன்.
313
17. தயோமிடிஸ்: கிரேஸிடா காதல் கவர்ந்தவன். கிரேக்க
18. பத்ரொக்ளிஸ்: கிரேக்க வீரன்.
19. தெர்ஸிடிஸ்: கிரேக்கக் கோமாளி, கிரேக்க வீரன்.
பெண்டிர்:
1. ஹெலன்: ஒப்பற்ற கிரேக்க அழகி, மெனிலாஸ் மனவிை. பாரிஸால் கவரப் பெற்றவள்.
2. அந்த்ரோமக்கே: ஹெக்டார் மனைவி.
3. கஸன்ட்ரா: பிரியம் மகள்; ஹெக்டார் தங்கை; தெய்வ வெறியால் பித்துக் கொண்டவளாகக் கருதப்பட்டவள்.
4.பாலிக்ஸெனா: பிரியம் மகள்.
5. கிரெஸீடா: கால்சஸ் மகள். திராய்லஸின் காதலி, தயோமிடிஸுடன் காதலுற வாடியவள்.
கதைச் சுருக்கம்
திராய் நகர் முற்றுகையின்போது கிரேக்கர் பக்கம் சென்று உதவிய சமயகுரு கால்சஸ் கிரேக்கர் பக்கம் சிறைப்பட்ட திராயின் படைத்தலைவன் அந்தெனருக்கு மாறாகத் தன் புதல்வியாகிய கிரெஸிடாவை திராய் நகரிலிருந்து மீட்டுக் கொண்டான். ஆனால், அதற்குள் அவர் தன் மாமன் பண்டாரஸின் உதவியால் திராய் அரசன் பிரியமின் ளைய புதல்வன் திராய்லஸ்
காதலைப் பெற்றிருந்தாள்.
நகரிலிருந்து வெளியேறுகையில் அவள் அவனுடன் பிரியாவிடை பெற்றுக் கையுறை மாற்றிக்கொண்டாள்.
இருதிறத்தினிரிடையேயும் தற்காலிகமாக ஏற்பட்ட போர் நிறுத்த மொன்றைத் துணைகொண்டு திராய்லஸ் தன் உடன்பிறந்தானான ஹெக்டாருடன் கிரேக்கரின் விருந்தாளியாக வந்து மறைவிலிருந்து கிரெஸிடா தயோமிடிஸ் என்ற கிரேக்க வீரனுடன் உறவாடியதையும் தன் கையுறையை அவனுக்குக் காடுப்பதையும் கண்டு சீற்றத்துடன் மறுநாள் போர்புரிந்தான்.