உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 38.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(314) ||.

அப்பாத்துரையம் - 38

அப்படியும் அக்சிலிஸ் என்ற கிரேக்கத் தலைவன் சூதாஸ் ஹெக்டாரைக் கொன்றுவிடவே முற்றிலும் மனமுடைந்து திராய்லஸ் திராய்நகர் மீண்டான்.

'கிரேக்க நாட்டிற் பிறந்த 2ஹெலன் என்ற இளவரசி கிரேக்கரிடையே மட்டுமன்றி அந்நாளைய உலகிலேயே ஒப்பற்ற அழகுடையவளாயிருந்தாள். அவளை3மெனிலாஸ் என்ற கிரேக்க அரசன் மணம் செய்து கொண்டான். ஆனால், அவளை மணம்விட்டு வந்திருந்த பலருள் "திராய் நகரின் அரசனாகிய 5 பிரியமின் மூத்த புதல்வனான பாரிஸ் ஒருவன். அவன் அவளை மண வினையிற் பெறாததனால் புழுக்கமுற்று அவளை மெனிலாஸினிடமிருந்து வலிந்து கவர்ந்து கொண்டு தன் நாடு

ஏகினான்.

7

இச்செயல் நேர்மையற்ற தென்றும் கிரேக்க மக்களுக்கு அவமதிப்பானது என்றும் எண்ணிக் கிரேக்க அரசர் அனைவரும் மெனிலாஸின் உடன் பிறந்தானான அகமெம்னான் தலைமையில் ஒன்று பட்டுப் பெரும்படையுடன் கப்பல்களிலேறி ஹெலனை மீட்கும் எண்ணத்துடன் திராய் நகரத்தை அடைந்து அதனை முற்றுகையிட்டனர். முற்றுகை பத்தாண்டளவும் நடந்தது. அதில் கிரேக்க இளைஞரும் திராய் இளைஞரும் பல்லாயிரக்கணக்கில் உயிர் துறந்தும் நெடுநாளாக இருபுறமும் தெளிவான வெற்றி ஏற்படாதிருந்தது.

கிரேக்கர் பக்கம் வெற்றி ஏற்படாதிருந்தன் காரணங்களுள் ஒன்று தலைவர்களிடையே ஒற்றுமையில்லாமை ஆகும். ஹெலனை இழந்தது பொதுவகையில் தங்கள் அவமதிப்பெனக் கிரேக்கர் பிறர் முன்னிலையில் வீம்புடன் கூறமுன்வரினும், தமக்குள்ளாக அடிக்கடி மெனிலாஸ் ஹெலனை வைத்துக்காப்பாற்ற முடியாத கோழையென்றும் மனைவியை இத்தனை பேர் மீட்கும்படி விட்ட கையாலாகாத பேர்வழி என்றும் குறைகூறி வந்தனர். அத்துடன் அச்சிலிஸ் முதலிய பெரு வீரர் எங்கும் புகழப் பெற்றதனால் உலகில் எல்லாம் தாமே என்று கருதி அவர்கள் தற்பெருமை கொண்டு செயலற்ற வராயிருந்து வந்தனர். போதாக் குறைக்கு அச்சிலிஸ் திராய் நகரத்துக்குத் தூதனாய்ச் சென்றிருக்கும்போது அங்கே பிரியமின்

8