உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 42

தரும். மீந்த பாதியை வட்டியும் முதலுமாக இப்படிக் காசில்லாமல் கிடைக்கும் அப்பமும் தேநீரும் தந்துவிடும். ஆனால், இன்று நான் தூங்கப் போவதில்லை. இந்த என் இன்பத்தில் பாதி உங்களுக்கு உரியது. என் வரலாற்றை நீர் அறிய வேண்டும், உங்கள் நண்பர் வெறும் கோமாளியல்ல என்று நீங்கள் ஆறுதல் பெறலாம்.

"என் தாய்தந்தையர் பெரும்புகழ் படைத்தவர்கள். நான் கோமாளியாக வாழ்ந்தாலும், என் தாய்தந்தையர் நான் இத்துறைக்கு வருவேன் என்று கனவு கண்டவர்களல்ல. அவர்கள் கோமாளிகளும் அல்லர்.”

நண்பன் தொனியிலிருந்து அவர்கள் ஏதோ பெரு மக்களோ யிருந்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால் நண்பனின் அடுத்த பேச்சு அந்த எண்ணத்தைக் கெடுத்தது.

அவர்: அவர்கள் பதவி அதனிலும் எவ்வளவோ பெரிது. தந்தை ஒரு கூத்துக் கழகத்தில் முரசறை வள்ளுவராகவே இருந்தார். தாய், தானே பொதுமக்களைக் கூவி யழைத்துப் பாடும் பாடகியாயிருந்தாள். இவ்வளவு உயர் மரபைப் பெருமக்கள் காட்ட முடியுமா?

நான் சிரிக்க முடியவில்லை, அவர் நடிப்பு முதல் தரமாயிருந்தது. கோமாளியைவிட முரசவள்ளுவனும் ஆட லணங்கும் எத்தனை உயர்வென்பதை அவர் குரலும் தொனியும் நடிப்பும் எனக்கு நன்கு எடுத்துக் காட்டி விட்டபிறகு, நான் அந் நடிப்பில் ஈடுபட முடியுமே தவிர, நகைச்சுவையில் எப்படிக் கருத்துச் செலுத்தமுடியும்?

அவர்: எங்கள் முன்னோர்களிலேயே மிகப் பெரும் பாலானவர் முரசவள்ளுவராகவே இருந்ததாகத்தான் கேள்வி. நான் என் தாய் தந்தையருக்கு ஒரே செல்வப் பிள்ளை.என்னையும் முரசுமரபுக்கே உரிமையாக்கத்தான் அவர்கள் எண்ணியிருந் தார்கள். ஆனால், உயர் கூத்துக் கழகத்துக்கு ஒரு படியாகச் சிறு பொம்மையாட்டக் கழகத்தில் முரசறை வோனாக ஏற்படுத்தினர். அந்நிலையிலிருந்து உயர்த்துமுன் அவர்கள் காலமாயினர்; என் துறையில் எனக்கிருந்த திறமையும் புகழுமே என்னை வேறு துறைக்குச் செல்லவொட்டாமல் தடுத்தன.