90
66
அப்பாத்துரையம் - 42
சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப நான் பட்டபாடு கொஞ்சமல்ல. இறுதியில் காட்டுவழியில் சேற்றில் சிக்கிய ஒரு ஊர்ச் சமயகுருவைத் தூக்கிவிட்டேன். அந்தப் பாவி நன்றிகூடத் தெரிவிக்காமல் சென்றான். நான் விடவில்லை. அவன் வீட்டு வாயில்வரைத் தொடர்ந்தேன். 'உங்களைச் சேற்றிலிருந்து தூக்கி விட்டேன், நீங்கள் நன்றிகூடத் தெரிவிக்கவில்லை. போகட்டும், என்னை வறுமைச் சேற்றிலிருந்து தூக்கிவிடுங்கள்', என்றேன். அவர் வேறு போக்கின்றி என் குணங்குறைகள் பற்றிய நற் சான்றுகள் கோர முனைந்தார். எனக்கு நானே எல்லா வகை நற்சான்றுகளும் தந்தபின், அவர் என்னை வேலையாளாக எடுத்துக்கொண்டார். ஆனால், இரண்டு மாதத்துக்குமேல் அவரால் என்னை வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர் கஞ்சன். நானோ 'தானே கொடாத இடத்தில், கேட்டு எடுத்துக்கொள்' என்னும் கெட்ட பழக்கமற்றவன். நான் மிகுதி வேலை செய்வதில்லை. ஆனால், பிறரை வேலையில் நன்றாக ஊக்குவேன்.எதையும் தொடுவதில்லை. உண்ணும் உணவு, குடிக்க ஏதேனும் இருந்தால் குடிவகைகள், ஆகியவற்றில் மட்டும் வஞ்சகம் கிடையாது. மதகுரு மட்டாக உண்ணு என்று மட்டற்று வாங்கிவைப்பார். மட்டாகக் குடி என்று குடிவகைகளைப் பதுக்கு வார். நான் அவர் உணவு உடைகளை மட்டாக்கிவிடுவேன்.அவர் கடியவும் முடியாமல்,பாராட்டவும் பெருந்தன்மையின்றி என்னை அனுப்பி விட்டார்.”
இதற்குள் தேநீர்க் கோப்பை வெறுமையாயிற்று. அதை நிரப்பினேன். இந்தக் குடிதானே என்னால் கொடுக்க முடியும்!
அவர்: "நெடுநாள் அரைப்பட்டினி கால்பட்டினியாய் உலவியபின் பழைய நாடோடிக் கழகமொன்று வரக்கண்டேன். அதில் சேர்ந்து நாடோடியாகவே திரிந்து வந்திருக்கிறேன். நாடோடி வாழ்க்கை எனக்குப் பிடித்தமாயிருக்கிறது. முழுப்பட் டினியை நான் வெறுக்கிறேன். அவ்வப்போது அரைப்பட்டினி. இடையிடையே முழு உணவு. வாய்ப்புக் கிடைத்த நேரம் தன்னை மறந்த குடி. இது போதும் இந்த உலக வாழ்வுக்கு.'