உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

187

வெற்றியிலும் பணம் திரட்டுவதிலும்கூட மனிதன் ஆர்வம் பொதுவாக இயற்கையானது. இது வீண் ஆர்வமாய் அமைந்ததன்று. செயல் விருவிருப்புடையார்க்கே பணம் ங்ஙனம் எளிதில் திரளும். மயக்க தயக்கமில்லாச் செயல் விருவிருப்பையே பணம் திரட்டும் பண்பும், பணம் சேமிக்கும் பண்பும் குறிக்கின்றன. மனித வகுப்பும் சமூகமும் தனி மனிதனும் இப் பண்பை அடிப்படைப் பண்பாகப் போற்றிவருகின்றன. இப் பண்பு பேணுபவன் தனி மனிதன் என்ற முறையில் தன் வெற்றிக்கும் உயர்வுக்கும் அடிகோலுகிறான். அதேசமயம் தன்னைச் சார்ந்தோர் நிலையையும் தெரிந்தோ தெரியாமலோ, வேண்டு மென்றோ வேண்டாமலோ உயர்த்திச் சமூக வளர்ச்சிக்கும் உதவுகிறான். சமூகமும் வகுப்பும் அவனை இம் முயற்சியில் ஆதரிப்பது இயற்கை. சமூக ஆதரவு மனிதஇன ஆதரவாய் மனித இயற்கைப் பண்பாய் ஊறியுள்ளது.

வாணிகத் துறையில் முன்னேறிய ஒருவர் அத்துறையில் பயிற்சி தொடங்குவோருக்கு வழிகாட்டியாக வரைவித்த தம் கல்லறை வாசகங்கள் வருமாறு:-

'காலம் பொன்னின்

மதிப்புடையது. ஒவ்வொரு

நொடியையும் ஒரு பொன்பொடியாகக் கணக்கிட்டுச் சேமிக்க.

"பிறர் உன்னிடம் எவ்வாறு

நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறாயோ அவ்வாறு நீயும் நட.

"இன்று செய்வதை நாளைச் செய்வேன் என்று கடத்தாதே. “நீயே செய்யக்கூடிய எதையும் பிறரைச் செய்ய விட்டு வாளா இராதே.

"உனதல்லாததில் விருப்புக் கொள்ளாதே.

“கவனத்துக்குரியதல்ல என்று எந்தச் சிறு செய்தியையும்

ஒதுக்காதே.

"திரும்ப உள்வராத எதனையும் வெளியே செல்ல விடாதே. "செலவு செய்யாதே, உற்பத்தி செய்.

"உன் வாழ்வின் செயல்களில் கூடியமட்டும் முதல்தர ஒழுங்கு அமையட்டும்.