உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190 ||

அப்பாத்துரையம் - 42

சேமிப்புப் பெரும்பாலும் குடி முதலிய வீண் இன்பங்களில் ஒரு பகுதியும், ஊதிய உயர்வுக்கான வேலை நிறுத்தங்களில் ஒரு பகுதியுமாகச் சிதறிவிடுகின்றன. பிரிட்டனில் மட்டும் வீண் செலவில் ஆண்டுதோறும் பத்துக் கோடிப் பொன்களும், வேலை நிறுத்தத்தில் பல கோடிப் பொன்களும் தொழிலாளரால் செலவு செய்யப் படுகின்றன என்று அறிகிறோம். இவ்வளவு பெரிய செலவீட்டில் ஒரு பகுதி அவர்கள் நல்வாழ்வுக்கான வீடு, புதுத்தொழிலுக்கு முதலீடான கட்டடம், இயந்திரசாலை ஆகியவற்றின் முதலிடப்பட்டால், தொழிலாளிகளே கூட்டுறவு முதலாளிகளாக முடியாதென்றில்லை.

ஆய்வியல், பொறியியல் அறிஞர் அறிவு வகுப்பினர் தனி உடைமையல்ல. அவ் அறிவு மக்கள் வகுப்புக்களை மதிப்பதல்ல. உண்மையில் சேமிப்பும் கூட்டுழைப்பும் மட்டும் இருந்துவிடுமானால், தொழில் துறையில் தொழிலாளர்நிலை முதலாளி நிலையையும் அறிவு வகுப்பு நிலையையும்வி மேம்பட்டதாகும். ஏனெனில், அவர்கள் ஏ அவர்கள் தொழிலறிவு தொழில்துறையினர் செயலாட்சிக்கும் அறிவாட்சிக்கும் உரிய நல்ல மூல முதலாகும். தொழிலாளிகளின் குறை முதலீடில்லாக் குறையும் நல்வாழ்க்கை வாய்ப்புகளில்லாக் குறையும் மட்டுமே. சேமிப்பும் கூட்டுறவும் இவ் விரண்டையும் அவர்களுக்குத் தரவல்லன.

தொழிலாளர் கூட்டுறவாகச் சேர்ந்து கழகம் அமைப்பது என்பது இப்போது புதிய செய்தியன்று. அவர்கள் கூட்டுறவுக் கழகங்கள் எங்கும் பரந்துள்ளன. ஆனால், அவை முதலாளி தொழிலாளி போராட்டத்திற்கென மட்டும் அமைந்து, அஃதொன்றிலேயே கருத்துச் செலுத்துகின்றன. ஆக்கத் துறையில், நல்வாழ்வுத் திட்டத் துறையில், புதுத்தொழில் வளர்ச்சித் துறையில், தொழிலாதிக்கத் துறையில் அவற்றின் கவனம் திரும்புவதே கிடையாது. இதுமட்டுமன்று, தொழிலாளர் கூட்டுறவுகள் அடிக்கடி முதலாளியை விட்டுவிட்டுப் பிற தொழிலாளர்களை எதிர்ப்பதிலும் முனைந்துவிடுகின்றன. தொழிலாளரிடையே தலைமை வகித்துச் செயலாற்றுவிக்கும் பல கட்சிகள் அவர்களை இவ்வகையில் தூண்டு கின்றன. போராட்டங்களில் கலக்காதவர், பின் தங்கியவர்,