வாழும் வகை
191
து
தயங்கியவர்கள் கூடத் தொழிலாளர்களால் தம் முதல் எதிரிகளாகக் கருதப்படும்படி தூண்டுதல் தரப்படுகிறது. இது தொழிலாளர் ஒற்றுமையை வளர்க்கும் செயலன்று; அதனைக் கருவிலேயே சிதைக்கும் செயல்.
மேலும், இத் தொழிலாளர் கூட்டுறவுகள் தொழிலாளர் கூட்டுறவில் சேர்ந்த தொழிலாளர் நலத்தை மட்டுமே எண்ணுகின்றன. ஊதியத்தை உயர்த்தும் முயற்சியில் தொழிலாளர் குறைப்புக்கு அவை மறைமுக ஆதரவு தருகின்றன. தொழிலாளர் வகுப்புக் கடந்து தொழிலாளர் இனத்தை இவை கவனிக்க முடிவதில்லை. ஊதிய உயர்வு காரணமாகவும் கூட்டுறவின் போராட்டம் காரணமாகவும் தொழிலாளர்களைக் குறைக்க முடியுமே தவிரப் புதுத் தொழிலாளர் அவ்வகுப்பில் எளிதில் இடம்பெற முடியாது. அன்றியும் திறத்தொழில்களில் புதியவர் வந்து தொழில் பழகும் வாய்ப்புக்கும், தொழிலாளர் இயக்கங்களும் தொழில் சார்ந்த சட்டங்களும் தடையாகவே அமைகின்றன. இன்றைய திறத்தொழிலாளர் பஞ்சத்திற்கு இது பெரிதும் காரணம் ஆகும்.
நாம் மேலே குறித்த கருத்துகள் செயல்முறையில் வெற்றிதராத கனவியல் கருத்துகள் அல்ல. செயல்முறைத் திட்டங்களே என்பதைக் கூட்டுறவியக்க வெற்றி காட்டுகிறது. பல துறையில் உழைப்பாளிகள் அதை மேற்கொண்டு பயன்பெறாம லில்லை. பிரிட்டனின் மீன் தொழில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கூட்டுறவடிப்படையிலேயே நடத்தப் பட்டு வருகின்றது. படகு கட்டுவதில், இயங்குவதில், தொழிற்படுத்திப் பயன் பெறுவதில் மீன்படவர் கூடி உழைத்தே பங்கு பெறுகின்றனர். கார்ன் வாலிலுள்ள வெள்ளீயச் சுரங்கத் தொழிலும் இங்ஙனம் தொழிலாளர் கூட்டுறவாலேயே நடத்தப் படுகிறது. ஆழ்நிலந் தோண்டுபவர் முதல் வெள்ளீயத்தை விற்பவர்வரை ஒரே கூட்டுறவாய் இயங்கி ஆதாயத்தைப் பிரித்துக்கொள்கின்றனர். தொழிலாளர் ஊதியத்திற்கிடமாக அவர்கள் பங்குவீதமே வரையறுக்கப்பட்டுள்ளது. ஃவினீஷியர் இத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பண்டைக் காலத்திலிருந்தே இம்முறை கையாளப்பட்டு இருக்கவேண்டும் தோற்றுகிறது.
என்று