உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

அப்பாத்துரையம் - 42

உரோமப் பேரரசை இயக்கியாட்கொண்டவன் சுல்லா. அவன் தனக்கு ணையாகப் பாம்பியை உயர்த்தினான். தனாலேயே பாம்பி வல்லாளன் பாம்பி ஆனான். அவன் சுல்லாவுடன் சரிநிகர் நிலைமட்டும் அடையவில்லை; அவனை விஞ்சிப் பெருமையடைந்தான். இஃது எங்ஙனமெனில், பாம்பி தன் நண்பனொருவனை உரோமப் போரரசின் கடல் கடந்த நாடொன்றின் ஆணையாளராக்க முனைந்தான். சுல்லா இதை எதிர்த்தபோது, அவன் சுல்லாவின் ஆணையை எதிர்த்துத் தாக்கியதுடன், "படி ஞாயிற்றின் அழகு கண்டு மக்கள் வாளா அமைவதில்லை; எழுஞாயிற்றின் புத்தழகிலேயே துணிந்து ஈடுபடுவர்," என்று அதட்டிப் பேசினான். அவன் பேச்சு செயல்துறையில் வெற்றியும் பெற்றது. இது மட்டுமா? ஜூலியஸ் ஸீஸர் தன் பின்னுரிமையாளனாகத் தன் நண்பன் டெஸிமஸ் புரூட்டஸைத் தேர்ந்தெடுத்தான். தன் தமையன் மகனுக்குப் பின் தன் மரபுரிமைகள் யாவும் அவனுக்கே செல்லக்கடவதென இறுதிப் பதிவும் செய்தான். புரூட்டஸுக்கு ஸீஸர் தந்த இந்த உயர்வும் ஆற்றலும் ஸீஸர் உயிருக்கே வினையாய் வந்து விடிந்தன. எப்படியெனில், சில தீக்குறிகள் கண்டு ஸீஸர் தம் மன்றக் கூட்டத்தைக் கலைக்கவிருந்தார். தீக்குறிகள் மட்டுமன்றி, அவன் மனைவி கல்பூர்ணியா கனவுகளும் அவனை அத்திசையிலேயே ஊக்கின. ஆனால், புருட்டஸ் அவனை அவனிருக்கையிலிருந்து கைபற்றி இழுத்துத் தனியே இட்டுச் சென்று, "நண்ப, நம் கல்பூர்ணியா இப்போது தீக்கனவுகள் கண்டிருக்கிறாள். அவள் இன்னும் ஒரு நற்கனவு காணட்டும். அதுவரை மன்றம் நடைபெறட்டும்,” என்றான். இவ்வுரைக்கு ஸீஸர் இணங்கினான். இஃது அறிவின் திறத்தால் விளைந்த செயலன்று, நட்பின் திறத்தால் விளைந்ததே. ஏனெனில், ஸீஸர், அவனுடன் கொண்ட ன் நட்பு அவன் அறிவின் ஆற்றல் கடந்தது. ஸீஸர் இஃதறிந்து அவனை எப்போதும் தன் ‘கூற்றணங்கு' என்றே குறிப்பிட்டன ராம். அந்தோணியின் உரையைச் சான்று காட்டி ஸிஸிரோ தம் டி ‘ஃவீலிப்பிக்’கில் இதனைக் குறித்துள்ளார்.

மேலும் அக்ஸ்டஸ் கீழ்குடிப் பிறந்த மெஸீனாஸைத் தன் தோழனாக உயர்த்தினான். அகஸ்டஸ் தன் புதல்வி ஜூலியாவின் மணம் பற்றி அத்தோழனுடன் கலந்து கொண்டபோது,