உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

213

ன்

பணிமுதல்வர், பணியாளர் தொடர்பு ஆண்டான் அடிமைத் தொடர்பு என்று கருதப்படுவதைவிட, பொருளியல் போராட்டத்திடையே இரண்டு எதிரெதிர் ஆற்றல்கள் என்று கருதப்படுவதைவிட, தந்தை பிள்ளை அல்லது மூத்த இளைய உடன்பிறந்தார் போன்ற சமத்துவ அன்புறவு முறை என்று கொள்வது சால்புடையது. முன் பிறந்த தமையன் பின் பிறந்த தம்பியுடன் போட்டியிட நாடமாட்டான். அவனைக் கைதூக்கி விடவே நாடுவான். அங்ஙனம் கைதூக்கி விடுவதால்தான் அண்ணன், மற்றவன் தம்பி என்ற தொடர்பு என்றும் போய்விடவும் செய்யாது. இம்முறையிலேயே பணிமுதல்வர் தம் பணியில் பணியாளர் ஒத்துழைப்பைப் பெற்று அதே சமயம் அவனுடன் ஒத்துணர்வு காட்டி, அவன் வளர்ச்சியிலும் ஒத்துழைத்து உதவி நாடவேண்டியவன் ஆகிறான்.

வள்ளல்களின் வள்ளன்மை பணத்தில் தொடங்கிப் பணத்தினாலேயே முடிந்துவிடுகிறது. அவர்கள் உதவியில் தோழமை இல்லை. உயிரற்ற அவர்கள் பணம் வாழ்வை அளிக்காது. ஏனெனில் வாழ்வை அளிக்க வல்லது பணம் அன்று; பணத்தை ஈட்டிக்காத்துப் பயன்படுத்தவல்ல பயிற்சியே நிறை அளிக்கும்.

தொழில் தொடர்பு எல்லாம் பணத் தொடர்புதான் என்று பல தொழில்முதல்வரும் தொழிலாளரும் எண்ணுவதுண்டு. இத்தகையோர் வாழ்க்கை நெறிதான் தனக்கென வாழ்வது என்பதே. யார் கெட்டால் என்ன, வாழ்ந்தாலென்ன? நான் வாழ வகை தேடினால் போதும் என்பது அவர்கள் வாய் பேசாத உள் நோக்கம்.

குறுகிய முதலாளித்துவத்தின் இக் குறுகிய தன்னல நோக்கு எவ்வளவு தீங்கானது என்பதைக் காட்டும் நிகழ்ச்சி ஒன்று குறிக்கப்பட்டுள்ளது. ஒரு விடுதியில் ஒருவன் ஆழ்துயிலில் இருந்தான். தெருக் கோடியில் இரவில் நெருப்பு மூண்டுவிட்டது என்று கூவி எழுப்பினான்.“நெருப்பு அடுத்த வீட்டுக்கு வரட்டும். அது வரை என் தூக்கத்தைக் கலைக்காதே," என்று அந்தத் தன்காரியக் கயவன் கூறினானாம். குறுகிய தன்னலப் போக்கு தைவிட உயர் பண்புடையதுமல்ல; இதைவிட அறிவுடையது மல்ல. மற்றுமோர் எடுத்துக்காட்டு இது: ஒரு பணிமுதல்வர் தம் பணியாட்களை நோக்கி, “உங்களால் முடிந்தமட்டும் என்னிடம் பொருள்பெற நீங்கள் முயற்சி செய்யுங்கள்; என்னால்