உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

217

போட்டியும் போராட்டமும் தடங்கல்களைக் கடக்கும் வகையில் மனிதனின் வலுவை வளர்க்கமுடியும். இயற்கையை மனிதன் வெல்லும் வழி இதுவே. இயற்கை மனிதனின் பகைவன் அல்ல. மனிதனுக்கு வெற்றியைத் தரும் வகைதுறையாக அதுவே மனிதனிடம் இப் பண்பை வளர்த்துள்ளது. உயிர் வளர்ச்சியில் இயற்கை மேற்கொள்ளும் முறை இதுவே. இம்முறை யின் பயனாகவே உயிர்களில் உயிராக, விலங்கினங்களில் விலங்கினமாக இருந்த மனிதன், மனிதனாய், மனித நாகரிகம் வளர்த்துள்ளான். இதன் மூலமாகவே அவன் இயற்கையின் செல்வனாய், இயற்கையுடன் இணைந்து வளரக் கற்றுக்கொண்டு வருகிறான். மனிதனின் சமூகச் சட்ட திட்டங்கள், அரசியல் அமைப்புக்கள் ஆகியவை இயற்கை யமைதியை எதிர்த்த வளர்ச்சிகளாயினும், அவையும் இயற்கைக்கு உட்பட்டு இயற்கை யடிப்படையிலேயே அமைந்து, இயற்கையை வெல்லவும் வென்ற வெற்றியை நிலையாகப் பேணிக் காக்கவும் மனித இனத்துக்கு உதவும் ஒரு துணை இயற்கையாகவே அமைந்துள்ளன. மனிதன் பழக்கவழக்கங்கள் அவனுக்குத் துணை இயற்கையாய் டுகின்றன (Habit is second nature) என்ற பழமொழி இதனாலேயே எழுந்துள்ளது. இயற்கையுடன் போட்டி யிட்டுப் பெற்ற இந் நற்பழக்கவழக்கங்கள், சட்டதிட்ட அமைப்புக்கள், நிலையங்கள், முறைகள் ஆகியவை உண்மையில் அவனுக்கு இயற்கையின் குறை நிரப்பும் நிறை மகுடமாகவே இயங்குகின்றன. இயற்கையுடன் போட்டி இறுதியில்

அதனுடன் கூட்டுழைப்பாயியங்குவது போலவே, மனிதருள் ஒருவருடன் ஒருவர், வகுப்புடன் வகுப்பு, நாட்டுடன் நாடு இயங்கும் போட்டியும் இறுதியில் ஒத்துழைப்பாய் அமையத்தக்கது. இதற்கு ஒத்துணர்வு தொடக்கத்திலிருந்தே உதவிதரும் உயிர் நிலைப் பண்பு.குடும்பப்பற்று, வகுப்புப்பற்று, சமூகப்பற்று,நாட்டுப்பற்று, உலகப்பற்று ஆகிய யாவும் இவ்வொத்துணர் வடிப்படையாய் எழுந்து படிப்படியாக விரிந்து செல்லும் அன்புநோக்கின் பலதரப் படிகளேயாகும்.

ஓடுகிற நீர் தேக்கப்பட்டால், அது அணை அளாவி உயரும். அதன் ஆற்றல் பெருகும். ஓடுகிற நீர் செய்ய முடியாத அருஞ்செயல்களை அது செய்யமுடியும். அது மட்டுமல்ல. விரும்பிய,திட்டமிட்ட வகையில் அது தொழிலாற்றச் செய்யவும்