உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

237

கவிஞர் பட்டியலில் தம்மையும் சேர்த்தே கூறுகிறார் என்பதில் ஐயமில்லை. “ஒருதடவை சிக்கனத்தின் இன்றியமை யாமையை உணர்ந்து, செலவைக் கூடியமட்டும் வெட்ட முயன்றேன். இதன் பயனாக மூன்று மாதச் செலவைப் பன்னிரண்டுமாத வருவாய்க்குள் அடக்க முடிந்தது.” அவர் சிக்கனம் இது. அவர் பொது வாழ்வு எப்படி யிருந்திருக்கும் என்பதை இது நன்கு காட்டுகிறது. இதை அவரே அறிந்து நயம்படவே கூறியுள்ளார், கலைஞர் ஆதலால்! ஆனால், குறையை அழகுபட எடுத்துக் காட்டிய கலை, அதனை அகற்ற உதவ வில்லை. அது வாழ்க்கைப் பயிற்சி, குடும்பப் பயிற்சியின்றி எளிதில் அமையமுடியாது என்பதை விளக்க இக்கடன்பட்ட பெரியோர் வாழ்வையும் சொற்களையும்விட நல்ல விளக்கம் வேண்டியதில்லை!

கிரீன், பீல், மார்லோ ஆகிய கவிஞர்கள் கலைஞர்க்குரிய எல்லாக் குற்றங்களுக்கும் உரிய கொழுகொம்புகள்! இன்பவாழ்வு, பெருஞ்செலவு, வரம்பிலா நடை, கடன்படல், சட்ட மீறுதல் எல்லாம் அவர்கள் வாழ்க்கை விளையாட்டுகள். கவிஞர்கள் போற்றிய கவிஞராகிய ஸ்பென்ஸர் ஒரு நேர உணவுக்கு வழியில்லாமல் ஆதரவற்றுத் தெருவில் மடிய நேர்ந்தது.

கலைஞர்கள் துயருக்கு அவர்களே காரணமாவர் என்பதை ஸ்டீல், கோல்டுஸ்மித் ஆகியவர்கள் வாழ்க்கைப் போக்குக் காட்டுகிறது. ஸ்டீல் கடன்படாத நாளில்லை. ஆயினும் அவர் இன்பப் பகட்டுக்களை நாடாம லிருந்தது கிடையாது. மட்டான வருவாயுடைய ஓர் அரசியற் பணி அவருக்கு அளிக்கப்பட்டது. அதனை அவர் எப்படிப் பயன்படுத்தி யிருக்கலாம்! ஆனால், எப்படிப் பயன்படுத்தினார்! அந்தச் சிறு அலுவலகத் துக்கு அவர் இரண்டு அல்லது நாலு குதிரை பூட்டிய வண்டியில் மன்னர்கோ மன்னர்போலப் போகத் தொடங்கினார். மற்றச் செலவுகளும் இதற்கொப்ப அலுவலகத் தேவைக்குமேல் வளர்ந்தன. கோல்டுஸ்மித் வறுமைக் கடலில் கடனே புணையாகக்கொண்டு நீந்தினார். ஒரு கடனிலிருந்து எந்த வகையிலாவது மீள நேர்ந்தால், உடனே அடுத்த கடனை அணைக்க அவர் தவறியதில்லை. ஒருவர் வீட்டாசிரியராக அவர் முதல்முதல் ஒரு மட்டான தொகையைக் கையேற்றார். அதனை அவர் உடனே செலவு செய்தார்-ஒரு குதிரை வாங்குவதற்காக! அவரைச் சட்டத் தேர்வுக்கு அனுப்பி