உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




246

அப்பாத்துரையம் - 42

இத்தனை வேலி ஆள்பவன் அல்லது இத்தனை ஊதியம் பெறுபவன், என்றுதான் கூறுகின்றனர். இதற்குமாறாக, அவன் நல்லவன், அன்புடையவன், ஒழுக்கமுடையவன் என்று பாராட்டுபவர் மிக அரியர்.

ஒருவன் பத்து நூறாயிரம் உடையவனாயிருந்தால், போதும். அவன் எவ்வளவு சிறுமையுமுடையவனாயிருந்தாலும் சரி, கவர்ச்சியற்றவனா யிருந்தாலும் சரி, அவனைப் பார்க்க மக்கள் வந்து குழுமுவர். அவன் செல்வம் சூதாட்ட மாளிகையினால் வந்ததா, குடிவகைக் குத்தகையால் வந்ததா, கூத்தியர் மாளிகைகளால் வந்ததா என்று எவரும் பார்க்க நாடுவதில்லை. இப் பணக்கிறுக்கு, செல்வத்தின் மாயக் கவர்ச்சி; மனித உலகின் பொதுக்குறை; ஆயினும் ஆங்கில மக்களிடம் இது சிறக்க மலிந்துள்ள பண்பு. இச் செல்வச் செருக்கே நாட்டின் பொதுக்கடன் அளவுபற்றி ஆங்கிலமக்கள் பெருமைப்படச் செய்கிறது.நாட்டிற்குப் பெருமைதரும் பண்பைத் தனிமனிதரும் பேணுவதில் வியப்புக்கிடம் ஏது?

செல்வம் மட்டும் மனிதரை மனிதர் மறக்கும்படி தூண்டியிரா விட்டால், உலகில் இன்று நடைபெறும் தீமைகளில் பாதித் தீமைகளுக்கு இடமே ஏற்பட்டிராது,” என்று திரு. கிரிஃவித்ஸ் கூறுகிறார். வேல்ஸ் நாட்டில் மண்ணில் புதையுண்ட திருக்குவைகள் மூலம் பொன்னும் வெள்ளியும் எங்கும் பொங்கி வழிந்தபோது, செல்வர் செல்வத்திற் புரண்டனர். தொழிலாளர் கள் கையில்கூட வெள்ளிகள் கணகணவென் றொலித்தன. ஆயினும் அச் செல்வத்தால் நாட்டில் பொதுநிலையங்கள், நூலகங்கள், பூங்காக்கள், கலையகங்கள் பெருகிவிடவில்லை. தொழிலாளர் வாழ்வின் தாயக வளங்கள் பெருகிவிடவில்லை. செல்வர் செல்வமும் நிலையாகிவிடவில்லை. அத்தனை ஆதாயமும் வீண்போயிற்று. ஏன்? செல்வர் ஆதாயம் நாடினர்; தொழிலாளர்நலம் நாடவில்லை. தொழி லாளரும் தம்போன்ற மனிதரென அவர்கள் எண்ணவில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்குப்போக மிஞ்சியதை வீண்செலவு செய்வது ஒன்றே தம் உரிமை என்று எண்ணினர். தொழிலாளரும் வந்தது வரவு, வராதது செலவு என்றிருந்தனர். தம் வருங்கால வாழ்வு, தம் சமூகம் ஆகியவற்றை மறந்தனர். செல்வர் செல்வப் பெருக்கு நாடினர்,