வாழும் வகை
247
செல்வத்தின் பயன் அறியாமல்! தொழிலாளர் வாழ்க்கை நாடினர், வாழ்க்கை வளம் யாதெனக் காணாமல்!
ஏழைகளை இவ்வகையில் ஒருவேளை மன்னிக்கலாம். அவர்கள் வாழ்வுக்கே அலந்தவர்கள். அவர்களுக்குக் கல்வியில்லை. அவர்கள் பிள்ளைகளுக்கு கல்விதர முடியவில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்குத் தாளமிடும்போது, பிறர் நலம்பற்றி எண்ண அவர்களுக்கு நேரமில்லாம லிருக்கலாம். ஆனால், செல்வர்களும் இதே நிலையில் இருப்பானேன்! செல்வம் பெருக்கிய அவர்கள் தம் பிள்ளைகளுக்குச் சரியான கல்வி கற்பிப்பதில் கருத்துச் செலுத்துவதில்லை. செலுத்தினாலும் தாம் பெருக்கிய பணத்தைக் கொண்டு தம்மைப்போல் பணம் பெருக்கும் பண்பை வளர்க்கும் ஒரு நிலையிலேயே கல்வி கற்பிப்பர். எனவேதான் செல்வம் அதைச் சேர்க்காததனால் ஏழைகளைத் தண்டிப்பதுபோல, இயற்கைப் பண்பு நாடாததற்குச் செல்வரையும் தண்டித்து ஒறுக்காம லிருப்பதில்லை.
செல்வமுடையவர் பெருமை முழுவதும் அவர்கள் வாழ்வுடனோ அல்லது அவர்கள் செல்வத்துடனோ கழிந்து விடுகிறது.பிறர்க்குப் பயன்படாத அந்தப் புகழை, செல்வத்தைப் பூசிப்பவர்கூட நெடுநாள் போற்றமுடியாது. போற்றுபவர்களும் மிகவும் இழிதரத்தவரே. உண்மைப் புகழ் போற்றுதலைப் பொறுத்ததன்று. பயனைப் பொறுத்தது. பயனில் செல்வர் தொகை பெரிது. ஏழையர் வாழ்வுக்கும் அவர் வாழ்வுக்கும் வேற்றுமை மிகுதி காணமுடியாது.
முடியரசும் உயர் குடியரசும் மட்டும்தான் செல்வராட்சி என்று கூறுவதற்கில்லை. குடியாட்சிகூடச் செல்வப்பற்றுக் காரணமாகச் செல்வராட்சியாகவே இயல்கின்றது. பல இடங்களிலும் அது மக்களாட்சியாக மலர்வதில்லை. இதற்குக் காரணம் யாதெனில், செல்வத்தில் பற்றுடைய ஏழையர் செயல்களும் செல்வர் செயல்களை ஒத்த பயனில் செயல் களேயாம் என்பதே. செல்வத்தைப் பயன்படுத்துவதிலும் பிறருக்கு நலம் செய்வதிலும் நாட்டமற்றவர் செல்வரானாலும் ஏழை யானாலும் அவர்கள் ஆட்சியும் செயலும் செல்வத்தைப் பூசிப்பவர் ஆட்சியும் செயலுமாகவே அமைய முடியும். உரோமர்களிடையே அருளாளர் என்று போற்றப்பட்ட