உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248

||-

அப்பாத்துரையம் - 42

பெரியார் கேட்டோவும், முடியரசை வெறுத்தெதிர்த்து சீசரை ஒழித்த வீரன் புரூட்டஸும் வட்டித் தொழிலாளராகவும் அடிமையாளிகளாகவுமே இருந்தனர். புரூட்டஸ் நூற்றுக்கு 48 வீதம் வட்டிக்குக் கடன் கொடுத்துவந்தார். அமெரிக்காவின் விடுதலை வீரர் வாஷிங்டன் தம் இறுதிப்பத்திரத்தில் தம் அடிமைகளைத் தம் மனைவிக்கு எழுதிவைத்தார்-அவர்களுக்கு விடுதலை அளிக்கும் எண்ணம் அவருக்கு வரவில்லை!

செல்வத்தின்

பயனின்மையைச்

செல்வமவாவும்

குடியாட்சியாளரை விடச் செல்வத்தில் புரண்ட முடியரசர் நன்கு உணர்ந்துகொண்டனர் என்னலாம். துருக்கிப் பேரரசன் சாலடின் சிரியா, அரேபியா, பாரசிகம், மெஸபொட்டேமியா ஆகிய நாடுகளையெல்லாம் வென்ற புகழ் வீரன். அவன் காலத்தில் வீரத்திலும் புகழிலும் செல்வத்திலும் அவனுக்கு மேம்பட்டவர் கிடையாது. ஆயினும், அவன் ஆணைப்படியே அவன் இறந்தபோது அவன் கடைசி ஆடையை அவன் ஆட்கள் ஈட்டியில் மாட்டி உயர்த்திப் பிடித்துக்கொண்டு எங்கும் சுற்றி, "இதோ பாருங்கள் நாட்டுமக்களே! சுல்தான் சாலடின் வென்ற நாடுகள், ஆண்ட ஆட்சி, ஈட்டிய பெருஞ்செல்வம், பெரு வீரம் யாவற்றிலும் இப்போது மீந்துள்ளது இந்த ஆடை ஒன்றுதான். இதோ அவர் இறுதிச்செல்வம் பாரீர்!” என்று கூறிச் சென்றனராம். நல்ல இஸ்லாமியன் என்ற முறையில் பேரரசன் மக்கள் வீணே பேரரசு, செல்வம் ஆகியவற்றில் மயங்கிவிடாமல், நல்ல இஸ்லாமிய ராக வாழும்படி கூற இங்ஙனம் தன்னையே ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் காட்டினான்.

'டான் ஜோஸே டி சாலமாங்கா' ஸ்பெயின் நாட்டில் புகைவண்டித் துறைக் குத்தகையால் பெரும்பொருளும் செல்வாக்கும் ஈட்டிய பொருள்மன்னர். இளமையில் அவர் கிரானெடாப் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது கந்தலாடையுடனேயே காலங்கழித்தவர். அச்சகத்திலுழைத்து நாட்டின் பொருளியலமைச்சராகி அதன் பின்னரே பொருளீட்டுந்துறையில் அவர் சிறந்தார். அந் நிலையில் அவர் தம் தாயகப் பல்கலைக் கழகத்தினருக்குத் தம் வாழ்க்கைப் படிப்பினையை அறிவிக்கையில் கூறியதாவது: “இப் பல்கலைக் கழகம் என்னைக் கலை நோக்கி நாட்டம் செலுத்துவித்தது.