(260) ||
அப்பாத்துரையம் - 42
எனப்பெறும். இதன் ஒளியே பண்பு. அது கலைப்பண்பாகவும் வாழ்க்கைப் பண்பாகவும் மலர்கிறது.
தனிமனிதன் உடலும் உளமும் தனித்தனியாகவும் கூட்டாகவும் இந்த இயற்கையமைதியுடனொத்து இயங்கும்வரை, உடல்நலமும் உளநலமும் மட்டுமன்றி மட்டுமன்றி அறிவுநலமும் செழித்தோங்கும். இவ் வமைதியை உணரவே அவனுக்குப் பகுத்தறிவு வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வமைதிகளை மீறும் போதெல்லாம் அவனுக்குப் பலவகைத் தீங்குகளும் குறைகளும் ஏற்படுகின்றன. உடலுழைப்புமட்டும் செய்தால் அவன் வலுப்பெறுகிறான். நீடித்த வாழ்வு பெறுவதில்லை. அறிவுழைப்பு மட்டும் செய்தால் வலுவின்றி நீடித்த வாழ்வு பெறுகிறான்- ஆனால், வலுக்குறைவால் நோய்களுக்கு ஆளாகி அடிக்கடி நீடித்த வாழ்வின் பயனைக் கெடுத்துக்கொள்கிறான். இரண்டு உழைப்பும் இல்லாத சோம்பனாயிருந்தால், உடல் வலுக்குறைந்து பெருத்து, இன்ப நுகர்வாற்றலில்லாமல் நோய்களுக்காளாகிக் குறுகிய வாணாள் உடையவனாகிறான். குடி, அவனுக்கு நரம்புத் தளர்ச்சி, பசியின்மை, வலுவின்மை, நோய், நடுக்கு வாதம், திமிர்வாதம் முதலிய நோய்கள் தந்து அவனை வாட்டுகின்றது. மீதூணும் உழைப்புக்கு மேற்பட்ட மட்டிலா இன்பமும் திடீர் நோய்களும் திடீர் உயிர்நீப்பும் தருகின்றன.
தனிமனிதன் உடலைப்போலவே, குடும்ப வாழ்வுக்குரிய வீட்டு வாழ்விலும் சமூக வாழ்வுக்குரிய நாட்டு வாழ்விலும் இயற்கையமைதி பேணுதல் நலன்களையும், அவற்றை மீறுதல் தீமைகளையும் தருகின்றன. வீட்டிலும் தெருவிலும் முழுமுழு வட்டங்களிலும், நீர், சாக்கடை தேங்கவிட்டால் நாற்றமும் உடல்நலக் கேடும் பெருகுகின்றன. வீட்டு நலத்தைக் கெடுப்பது வீட்டுச் சாக்கடை மட்டுமன்று; அடுத்த வீட்டுச் சாக்கடையும், தெருச் சாக்கடையும் அடுத்த தெரு, ஊரிலுள்ள நாற்றக் காற்றும் கூட ஊரும் தெருவும் வீடும் கடந்துவந்து தாக்கும் தன்மை யுடையன. ஆகவே வீட்டிலுள்ளார் வீட்டைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதன் மூலம் தனிமனிதர், வீடு ஆகியவற்றின் கடமையை மட்டுமல்ல, தெரு, ஊர், நாட்டுக் கடமையையும் ஆற்றுகின்றனர். இத்துடன் அவர்கள் கடமை முடிந்துவிடவி ல்லை. தெருவையும் ஊரையும் நாட்டையும் படிப்படியாகத்