உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 42.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வாழும் வகை

263

அதன் அருமையையும் பொறுத்தது. எல்லா மக்களுக்கும் போதிய காய்கனிகள் எளிமையாய்க் கிடைத்தபோது, உணவு மதிப்பற்றதாகவே இருந்திருக்கவேண்டும். அது குறைந்தபின்பே வேட்டையாடியும் கடலில் மீன் பிடித்தும் பயிரிட்டும் உழைப்பினால் அதனை அருமையாகத் தேடத் தொடங்கினான். விலை இவ்வருமை காரணமாகவும், இவ்வுழைப்புக் காரணமாகவும் ஏற்பட் டதே. நீரும் காற்றும் இவற்றைவிட எவ்வளவோ இன்றியமையாதவை யானாலும், உழைப்பில்லாமல் இயற்கையின் வண்மையினால் கிட்டத் தட்டத் தங்குதடை யின்றிக் கிடப்பதனால், அவை மதிப்பற்றவைபோலத் தோன்றுகின்றன.

பல இடங்களில் மனிதன் விலை மதிப்புடைய பொருள்களில் கவனம் செலுத்தி, விலையிலா நீரிலும் காற்றிலும் கவனம் செலுத்தாது போனதாலேயே, சமூகத்தில் பல நோய்களும், குறுகிய வாழ்நாளும், இன்னதென்று கணித்துணராத மனச் சோர்வும் உடையவனாய் நலிவுற்று வந்திருக்கிறான். கப்பலில் அடித்தளத்தில் மிகுதி ஆள் நெருக்கங் காரணமாக, ஒருவன் நச்சுக்காற்று முட்டி இறக்கும் நிலையடைந்தான். அவன் தோழர்கள் அவன் அகல்வெளியில் இறந்தால், எளிதில் உடலை நீரில் அடக்கம் செய்யலாம் என்று எண்ணி மேல்தளத்துக்குக் கொண்டு வந்து கிடத்தி அவன் சாவுக்குக் காத்திருந்தனர். ஆனால், அவன் சாகவே

நடக்கத் தொடங்கினான்!

ல்லை. சிறிது நேரத்தில் எழுந்து

நாட்டுப்புற வாழ்வின் சிறப்பு அதில் கிடைக்கும் திறந்த தூய காற்றும், இயற்கை தரும் நல்லொளியுமேயாகும். சாக்கடைத் தொல்லை அங்கே பெரும்பாலும் இருப்பதில்லை. இருக்கும் சிறுசிறு அழுக்கும் கழிசடையும் திறந்த காற்று, வெயில் ஆகியவற்றால் அகல இடமிருக்கிறது. இயற்கைவாழ்வு வாழும் நாட்டுப்புற மக்கள் வாழ்வில் போலிப் பகட்டும் அதன் பயனான அக அழுக்குடன் கூடிய புறத்தூய்மையும் கிடையாது.புறப்பகட்டு வாழ்வுக்கு வேண்டிய பொருள்வேட்டையும் வாழ்வின் இன்பம்மறந்த பரபரப்பும் நாட்டுப்புறத்தை நாடுவதில்லை. இத் தீமைகள் நகரத்தில் பெருகுவதால், அதன் அகவாழ்வின் அமைதி கெட்டு, மக்கள் உடல்நலம் அழிகிறது. வாழ்நாள் குறுகுகிறது.